முதலமைச்சருக்கெதிராக ஒழுங்கு நடவடிக்கை : மாவை !

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். 

1320491996Untitled-1

வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், விக்னேஷ்வரன் மீது பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார். 

இந்தநிலையில் சேனாதிராஜா நேற்று இந்திய ஊடகமான ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது: 

பாராளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக இருந்தன. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ம் திகதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும், என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் வரும் 30-ம் திகதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 

மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இம் மாதம் 14-ம் திகதி தொடங்கி அக்டோபர் 2-ம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.