முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் கைது !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் அந்தோனி பெரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

crime-arrest
9 மில்லியன் ரூபாவுக்கான காசோலை மோசடி சம்பவம் தொடர்பில் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். 

இதனையடுத்து இவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.