அமைச்சர் ஹலீமுக்கு சாய்ந்தமருது மக்களின் வாழ்த்து !

-எம்.வை.அமீர் –

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள்  அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு வழங்கப்பட்டது. அனைத்து முஸ்லிம்களுக்கும் வரப்பிரசாதமாகும் என்று இலங்கையில் 100% முஸ்லிம்கள் வாளும் சாய்ந்தமருது பிரதேச புத்திஜீவிகள் கூறுகின்றனர்.

haleem

அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கையின் 8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராக மீண்டும் ஹலீம் தெரிவாகியது இந்த நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் பெரும் ஒரு வரப்பிரசாதமாகும் 

கடந்த ஆட்சிக் காலங்களில் முஸ்லிம்களுக்கான தனி முஸ்லிம் சமய கலாசார அமைச்சு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

haleem1

இன்று ஐ.தே.கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது  பெரும் சந்தோஷத்தை தருகின்றது அதிலும் குறிப்பாக நேர்மையான ஒழுக்க விழிமியங்களை கையாளக்கூடிய இஸ்லாமிய அடிப்படை கோட்பாட்டை கொண்டவரும்.இலங்கையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சராகவும் மேலும் பல அமைச்சராகவும் அனைத்து இன மக்களின் நன்மதிப்பை பெற்று வந்த. அல்ஹாஜ் ஏ.சி.எஸ்.ஹமீட் அவர்களின் அன்பு மருமகன் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்கள் தெரிவாகப்பட்டது இந்த நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைத்த ஓர் வரப்பிரசாதம்.

15 ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், முஸ்லிம் வேட்பாளகளில் அதிகூடிய 1110011 விருப்பு வாக்குகளை பெற்று முதல் நிலைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

அரசியல் துறையில் சிறப்பாக தடம் பதித்து வெற்றிகரமாக செயல்பட்ட அனுபவ பின்புலங்களை கற்றுக்கொண்ட ஒருவர். 

குறிப்பாக கல்முனை ஐ.தே.கட்சியின் அதி முக்கிய செல்வாக்கை பெற்று வருகின்ற பிரச்சார செயலாளரும் மருதம் கலைக்கூடல் தலைவரும் சமூக சேவையாளருமான அஸ்வான் சக்காப் மௌலானாவை  எமது அமைச்சர் இனம் கண்டு அமைச்சின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டமைக்கு உளமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் சாய்ந்தமருது புதிதிஜிவிகள்  தெரிவித்துக் கொள்கின்றார்கள். 

Sainthamaruthu-Welcome