ஜவ்பர்கான்
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் நேற்று முதல் பெரும் எண்ணிக்கையிலாள ஜெலி மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன.
மட்டக்களப்பு காத்தான்குடி கொக்கடிச்சோலை உட்பட பல வாவியோரங்களில் இவைகள் இறந்த நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எம்.ருக்ஸான் குறூஸிடம் கேட்டபோது தற்போது இம்மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெப்பம் இதற்கான காரணமாக இருக்கலாம் ஆனாலும் இது தொடர்பான விஞ்ஞான ரீதியிலான காரணங்களை கண்டறிய நாரா நிறுவனத்துடன் தொடர்புகொண்டுள்ளோம் எனத்தெரிவித்தார்.
உயிருடன் வரும் ஜெலி மீன்கள் கரைக்கு வந்து இறப்பதையும் அவதானிக்க முடிகின்றது.