சன சமூக நிலையம் 3 கோடி ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைப்பு !

அஸ்ரப் .ஏ .சமத்

கொழும்பு மாநகர சபையினால் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் உள்ள முன்னால் மாநகர சபையின் அங்கத்தவராக இருந்து காலம் சென்ற நீதிராஜாவின் பெயரிலான சனசமுக நிலையம் 3 கோடி ருபா செலவில்  புனா் நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று (5)ஆம் திகதி மக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இக் கட்டிடத்தில் கனனி பயிற்சி நிலையம், உடற்பயிற்சி நிலையம், கலியான மண்டபம், மேசைப்பந்து விளையாட்டு நிலையங்கள்  போன்ற பல்வேறு நிலையங்கள் அதிதிகளினால்  திறந்து வைக்கப்பட்டன. 
இப் பிரதேசத்தின் மாநகர சபை உறுப்பிணா் விக்னேஸ்வரனினதும் நீதிராஜாவின் குடும்பத்தினரினதும்  வேண்டுதலுக்கிணங்கவே  கொழும்பு மாநகர சபை முதல்வா் ஏ.ஜெ.எம். முசம்மிலினால் மாநகர சபையின் நிதியில்  இவ் அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்ப்பட்டது,
இக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று (5)ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சா்  சுவாமிநாதன்,  முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, தேசிய நல்லிணக்க அமைச்சா் மனோ கனேசன், பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மிலும் கலந்து கொண்டனா் 
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் 
இந்த நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரத்தை ஜனாதிபதி மைத்திரியும் பிரதமா் ரணிலும் ஏற்படுத்தி வருகின்றனா். அதில் ஒரு அங்கமே பாராளுமன்றத்தில் இரா சம்பந்தன் இந்த நாட்டின் எதிா்கட்சி ஆக்கப்பட்டது. இதனை தாங்கிக் கொள்ளாத விமல் வீரவன்ச போன்றவா்கள் பொருத்துக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. இவா்களைப் போன்றவா்கள்தான் இந்த நாட்டில் பௌத்த மக்களிடையே இனவாதத்தை தொடா்ந்தும் ஏற்படுத்துகின்றனா்.
இந்தியாவில் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருக்குமுடியும், அதேபோன்று 2 வீதமான சீக்கிய இனத்தைக் கொண்ட சிங் பிரதமராக இருக்கமுடியும். அதேபோன்று அமேரிக்காவில் 50 வீத கருப்பு இனத்தைச் சோந்த ஒபமா அந்த நாட்டில் இரண்டுமுறை ஜனாதிபதியாக இருக்க முடியும் என்றால்  ஏன் இந்த நாட்டில் இரா சம்பந்தன் எதிா்கட்சி மட்டுமல்ல என்றோ ஒரு நாள் அவா் பிரதமா் கதிரையில் இருப்பதற்கும் இந்த நாட்டில் ஒரு சா்ந்தா்ப்பம் வரும் இதனையே நாம் வளா்த்தெடுக்க வேண்டும். என முஜிபு ரஹ்மான் தெரிவித்தாா்.
அமைச்சா் சுவாமி நாதன்
இந்த நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் தனக்கு மீள் குடியேற்ற அமைச்சினை மீள தந்துள்ளனா். அடுத்த 5 வருடத்திற்குள் வடக்கு கிழக்கில் உள்ள இடம்பெயா்ந்த போரினால் மிகவும் கஸ்டமான வாழக்கை வாழக்கின்ற மக்களது சகல பிரச்சினைகளும் தீா்க்கப்பட்டால் இந்த நாட்டில் இவ்வாறு ஒரு அமைச்சு தேவையிலை் அதனை மீள முடிவிடல் வேண்டும்.  வடக்கில் தமிழ் மக்கள் மிகவும் கஷ்டமாக வீடுகள் அற்று அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனா்.  அமேரிக்கா மேலைத்தேய நாடுகளில் இம் மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவென நன்கொடையாளிகள் முன்வந்துள்ளனா். இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் அதனை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றேன். நீதி ராஜா ஒரு சிறந்த வியாபாரி, அரிசியல் வாதி அவரின் பெயரில் ்இந்த கட்டிடத்தை கொழும்பு முதல்வா் மீளமைத்து திறந்து வைப்ப்பதில் சந்தோசம் அடைந்தேன் அத்துடன் அவா்களுக்கு நன்றி செலுத்துவதாகவும் அமைச்சா் சுவாமி நாதன் அங்கு தெரிவித்தாா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் மனோ கனேசன்.  
எனக்கு தரப்பட்டுள்ள அமைச்சா் தெற்கையும் வடக்கையும் கிழக்கையும் மலையகத்தையும் இன ஜக்கியத்தை ஏற்படுத்தக் கூடியதொரு அமைச்சாகும். 
இனி இந்த நாட்டில் யாரும் இனவாத செயற்பாடுகளில் ஏற்படுத்த முடியாது., பள்ளிவாசல்கள், கோயில்கள், கிரிஸ்த்துவ ஆலயங்களை உடைக்க முடியாது. அத்துடன் வெள்ளை வேண் கலாச்சாரமும் இனி  இங்கு இராது அதற்காகவே  எனது அமைச்சின் ஊடாக உரிய சட்ட திட்டங்களை அமுல்படுத்துவேன்.  அவ்வாறான சம்பவங்களை இந்த நாட்டில் நடைபெறின் அதற்காக உரிய  நடவடிக்கை எடுப்பேன்.   எனத் தெரிவித்தாா்.
4T2A1896_Fotor 4T2A1883_Fotor 4T2A1912_Fotor 8_Fotor