சிரியா நாட்டு குழந்தையின் மரணத்துக்குரிய முழு பொறுப்பையும், அமெரிக்க, ஐரோப்பா மற்றும் சிரியாவின் கொடுமைக்கார ஆட்சியாளருக்கு உதவும் ஈரான் ரஷ்யா போன்ற நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் – முபாறக் அப்துல் மஜீத்

ஜவ்பர்கான்

 

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிரியா நாட்டு குழந்தையின் மரணத்துக்குரிய முழு பொறுப்பையும், அமெரிக்க, ஐரோப்பா மற்றும் சிரியாவின் கொடுமைக்கார ஆட்சியாளருக்கு உதவும் ஈரான் ரஷ்யா போன்ற நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி தெரிவித்தார்.
moulawi-mubarak-01

அவர் மேலும் தெரிவித்ததாவது, சத்தாம் ஹுசைன் காலத்தில் ஓரளவு அமைதியாக இருந்த ஈராக்கில் அதன் பொருளாதாரத்தை கொள்ளையடிக்க அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்கியமை காரணமாகவே மத்திய கிழக்கில் குண்டுச்சத்தங்கள் பரவலாகின.
அதே போல் சிரியாவில் நீண்ட காலமாகவே அங்கு வாழும் சுன்னி முஸ்லிம்கள் அடக்கு முறைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களின் ஜனநாயக ரீதியலான உரிமை போராட்டங்கள் உதாசீனப்படுத்தப்பட்டு பலரும் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். அவற்றின் எதிரொலியாக உள்நாட்டு போர் வெடித்தது. சிரியாவின் ஆட்சியாளருக்கு பக்க பலமாக ஈரான் இருந்து வருவதுடன் ரஷயா மூலம் ஆயுத உதவியும் செய்து வருகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

சிரியா, ஈராக் நாடுகளின் உள்நாட்டு போர் ஐ எஸ் என்ற தீவிரவாதத்தை உருவாக்கி விட்டுள்ளது. இவ்வாறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிகள் காரணமாக தினமும் பல றூற்றுக்கனக்கான அப்பாவி உயிர்கள் செத்து மடிகின்றன. இதன் அகோர காட்சியே அந்தக்குழந்தையின் பரிதாப மரணமாகும்.

ஈராக்கிலும் சிரியாவிலும் அமைதி ஏற்பட வேண்டுமாயின் முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான் போன்ற நாடுகள் ஈராக், சிரியா அரசுகளுக்கும், தீவிரவாத இயக்கங்களுக்கும் தமது ஆயுத விற்பனையையும், வழங்குதலையும் உடன் நிறுத்த வேண்டும். அதன் பின் அங்கு சுதந்திரமற்று வாழும் சுன்னி முஸ்லிம்களுக்கு கௌரவமான சுயாட்சி வழங்க ஐக்கிய நாடுகள் சபை முன் வரவேண்டும். இதற்கான காத்திரமான நடவடிக்கைகள் பேச்சுவார்த்தை மூலம் முன்னெடுக்கப்பட்டு சுயாட்சி வழங்கி அமைதி ஏற்பட ஐக்கியநாடுகள் சபை முன் வராத வரை இத்தகைய பரிதாப மரணங்கள் தொடரும் அறிகுறியே தெரிகின்றன.

ஆகவே மேற்படி குழந்தையின் மரணத்துக்காக ஸ்ரீலங்கா உலமா கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளியிடுவதுடன் இதற்கான முழு பொறுப்பையும் ஈராக், சிரிய அரசுகள் மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உட்படட ஈரானும் ரஷ்யாவுமே ஏற்க வேண்டுமென சொல்லிக்கொள்கிறது என மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.