அஸ்ரப் ஏ சமத்
இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளார் சங்கம் ” இன்று வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டலில் இரண்டு முஸ்லீம்கள் பற்றிய நூல்களை வெளியீட்டது.
இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி , மற்றும் முஸ்லீம் விவாவக விவாகாரத்துச் சட்டமும் என்று பல மார்க்க அறிஞர்களது ஆக்கங்கள் ஒன்று சேர்த்த நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நூலில் வணக்க வழிபாடுகளில் சமத்துவம், இஸ்லாமிய நோக்கில் திருமனம், நெருங்கிய வாழ்க்கைத் துனை வன்முறை, இஸ்லாத்தில் பலதாரத் திருமணம் ஒரு பண்முக நோக்கு போன்ற பல்வேறு தலைப்புக்களில்
நளிமியா பட்டதாரிகள் கட்டுரைகளை வரைந்துள்ளனர் .
இதனை இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளார் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளார் எம்.ரி.ரஸ்மின் சட்டத்தரணி ஹஸனாஹ் சேகுஇஸ்சதீன் தொகுத்து நுாலக வெளியீட்டுள்ளனர்.
இந் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் கலந்து கொண்டார். அத்துடன் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மானிடம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினைச் சந்தித்து முஸ்லீம் விவாக விவாகரத்துச் சட்டம் பற்றிய சட்டச் திருத்தங்களை முன்னெடுக்குமாறு கடிதம் கையளிக்கப்பட்டது.
சட்டத்தரணி சபானா ஜீனைதீன் மற்றும் முன்னாள் மீள்பார்வை ஆசிரியர் சிறாஸ் மசுர் ஆகியோறும் நூல் பற்றி உரையாற்றினார்கள்.
நூலின் பிரதிகள் கட்டுரை களை எழுதிய நளிமியாக்கள் ஜனாபா பேரியலிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.