இரண்டு லட்சம் அகதிகளை ஏற்க வேண்டும் : ஐக்கிய நாடுகள் சபை !

 குடியேறிகளின் பிரச்சனைக்கான பொது யுக்தியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரண்டு லட்சம் அகதிகளை ஏற்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டிருக்கிறது.

united nation

ஆனால் அகதிகளை பகிர்ந்துகொள்வதில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மத்தியில் முரண்பாடு நிலவுகின்றது.

 

ஹங்கேரியில் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனிக்கு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள்பூடாபெஸ்டுக்கு மேற்கே அகப்பட்டிருக்கிறார்கள். 

 

பூடாபெஸ்ட் ரயில் நிலையத்துக்கு திரும்பிய சிலர் இப்போது ஆஸ்திரியாவுக்கு ”நடந்தே செல்ல” முயற்சிக்கிறார்கள்.

 

கடுமையான சட்டம்:

எல்லைகளில் கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சட்டத்தை ஹங்கேரிய நாடாளுமன்றம் இப்போது அங்கீகரித்திருக்கிறது.

 

ஐரோப்பாவுக்கு படகில் செல்லும் முயற்சியில் லிபிய கரையோரமாக சுமார் நாற்பது பேர் பலியான நிலையில் இவை நடக்கின்றன.