வாழைச்சேனை கடதாசி ஊழியர்கள் சம்பளம் கேட்டு ஆர்ப்பாட்டம்!

அசாஹீம் 

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாத சம்பள நிலுவை வழங்கப்பட வில்லை என்று இன்று (03.09.2015) கடதாசி ஆலை முன்பாக அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துனர்.

02_Fotor

 

கடந்த மார்ச் மாதம் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டே எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது என்றும் அப்போது கொழும்பில் இருந்து வந்த மேலதிகாரிகலாள் எங்களுக்கான சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தும் கடந்த ஜூலை மாத சம்பளம் இரண்டு தடவைகளில் 50 வீதம் வழங்கப்பட்டதுடன் ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் முழுவதும் வழங்கப்படவில்லை இதனால் அன்றாடம் சாப்பிடுவதற்கும் நாங்கள் சிறமம்படுவதாகவும் தலைமைக் காரியாலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்கப்பட்டுள்ள போதிலும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுகக்கே சம்பளம் நிலுவையாக உள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

08_Fotor

எங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் அல்லது சுய விருப்பில் அல்லது கட்டாய சுயவிருப்பில் எங்களை அனுப்புவதற்குறிய நடவடிக்கைகளை நாளை அமையப் போகும் புதிய அமைச்சரவையில் அமைச்சராக வரப்போகின்றவர் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

 

வாழைச்சேனை கடதாசி ஆலையில் 33 கோடி ரூபா மின்சார கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ள நிலையில் கடந்த 09.02.2015 ஆம் திகதியன்று மட்டக்களப்பு தலைமை மின்சார சபை அதிகாரிகலாள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அன்று முதல் கடதாசி ஆலை இயங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

01_Fotor