புற்று நோயைக் கண்டறியும் நவீன ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான கதீஜா நிறுவனத்தின் நிகழ்வு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

மஹரகம புற்று நோய் வைத்திய சாலையில் புற்று நோயைக் கண்டறியும் நவீன ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு செல்வந்தர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் அடங்கி குழுவினரின் ஆரோசனைபையப் பெற்றுக் கொள்வதற்கான நிகழ்வொன்றினை கதீஜா நிறுவனம் கொழும்பு 07 இல் உள்ள உபாலி நவலோகா வரவேற்பு மண்டபத்தில்  (2015.09.01) ஏற்பாடு செய்திருந்தது.

IMG_8050_Fotor

 

முதற்கட்டமாக சுமார் 20 கோடி ரூபா பெறுமிதயான நவீன ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு சகல இலங்கை வாழ் மக்கள் அனைவரிடத்திலிருந்தும் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது

IMG_8052_Fotor

கதீஜா நிறுவன தலைவர் எம்.எஸ்.எம். முஹம்மத் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் மஹரகம புற்று நோய் தேசிய வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜயசூரிய, டிமோ மோட்டார் கம்பனியின் தலைவர் ரஞ்ஜித் பண்டிதகே, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உள்ளிட்ட பலர் தமது பூரண ஒத்துழைப்புக்களை தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

IMG_8059_Fotor

 

மேற்படி இயந்திரக் கொள்வனவுக்கான பண உதவிகளை மஹரகம புற்று நோய் வைத்திய சாலையின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட வேண்டும் அதற்கான விபரங்களை விரைவில் ஊடகங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத் தலைவர் தெரிவித்தார்

IMG_8051_Fotor.