தென்கிழக்கு பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர்களின் ஒன்றுகூடலும் புதிய நிருவாக தெரிவும்!

 

-எம்.வை.அமீர்-

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாக கடமையாற்றுபவர்களின் ஒன்றுகூடல் நிகழவும் புதிய நிருவாகத்தினரின் தெரிவும் மாளிகைக்காடு விஸ்மில்லாஹ் ஹோட்டேல் கேட்போர் கூடத்தில் 2015-08-29 அன்று இடம்பெற்றது.

1 uni

ஆய்வுகூட உதவியாளர் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.முஹைதீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாக கடமையாற்றுபவர்கள் கலந்து அவர்களுக்குள் ஐக்கியமாக செயற்படுவது குறித்தும் தங்களது கடமையை இலகுபடுத்த பல்கலைக்கழக நிருவாகத்தின் அனுசரணையுடன் பயிற்சிகளை கோருவது எனவும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு முடிந்த அனைத்தையும் செய்வது எனவும் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை நிருவாகத்துடனும் உயர் அதிகாரிகளிடமும் பேசி தீர்வுகளை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இங்கு புதிய நிருவாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர். இதில் புதிய தலைவராக எம்.எஸ்.அஹமட், செயலாளர் சலீம் றமீஸ், பொருளாளர் வை.பி.எம்.நபீல், உபதலைவர் எச்.எம்.ஹன்சியார் உபசெயலாளர் கே.ஹபீல் முஹம்மட், நிருவாக உறுப்பினர்களாக எம்.வை.அமீர் மற்றும் கே.ஆப்தீன் ஆகியோரும் இணைப்பாளராக ஆர்.நௌசாட் அவர்களும் ஆலோசகர்களாக ஏ.எஸ்.முஹைதீன் மற்றும் எஸ்.ரிபாய்டீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

உறுப்பினர்களாக பீ.ரீ.எம்.ஹக்கீம்.எச்.எப்.பர்சானா பேகம், யூ.எல்.எம்.ஹமீட்,எம்.சீ.சுபீன்,ஏ.எம்.அஷ்ரப் அலி,எம்.ரீ.றிபான்,எஸ்.சத்திய ராஜா, கே.எல்.எம்.ஏ.ஹசன்,ஏ.சறூக் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

2 uni 3 uni 4 uni