-எம்.வை.அமீர்-
இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாடு வாழ் இலங்கை 20 இலட்சம் மக்கள், வாக்குரிமயற்று இருப்பது கவலையளிக்கக்கூடிய விடயம் என்றும், நமது ஜனநாயக நாட்டில் வாக்குரிமையை ஒவ்வொரு இலங்கை பிரஜையும் பெறவேண்டும் என்பதை, வலியுறுத்திப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு வெளியே வாழும் ஒவ்வொரு இலங்கை பிரஜையும் அமைப்புக்களும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கிறார் இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டனியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார்.
இலங்கைக்கு வெளியே வாழும் இலங்கையர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்தி அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை பெற அழைப்பு விடுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு 2015-08-29 அன்று அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்ட அழைப்பை இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டனியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் விடுத்தார்.
20 இலட்சம் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் தொழில் நிமிர்த்தம் வாழ்ந்து கொண்டிருக்க. உள்ளூரில் அவர்களின் வருமானத்தில் தங்கி வாழும் சொந்தங்கள் குறைந்தது இன்னும் 20 லட்சம். மொத்தமாக வெளிநாடு வாழ் இலங்கை தொழிலாளர்களும் கும்பமும் சேர்ந்து குறைந்தது 40 லட்சம். வெளிநாடுகளில்வெயிலிலும் குளிரிலும் பாடு பட்டு , வியர்வை சிந்தி , தனக்காகவும் தனது குடும்பசுமைக்காகவும் பாடுபடுகிறார்கள்.
நாட்டைப் பிரிந்ததால் நீங்கள் இழந்தவைகள், நீங்கள் இழந்த சுக போகங்கள், இழந்த உறவுகள் , திருமண பந்தங்கள், உங்களை பிரிந்ததால் உங்கள் பிள்ளைகளும் , கணவன் மனைவியும் இழந்தவைகள் எத்தனை?. மீள முடியாத மீட்க முடியாத கஷ்டங்கள் , வேலை செய்யும் இடத்தால் சொல்லோன்னாத்துயரங்கள், மன அழுத்தம் , துஷ்பிரயோகம் ஏன்று சொல்லிக் கொண்டே போகலாம்.
20 இலட்சம் தியாகிகள் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக ஒரு வருடத்திற்கு அனுப்புகின்ற பணம் சுமார் ஒருலட்சம் கோடிகள். இது நீங்கள் நாட்டின் பொருளாதரத்தின் மிகப் பெரிபங்காளி என்பதற்கான சான்றாகும். துரதிஸ்ட வசமாக , உங்களுக்கும் உங்களுடைய குடும்ப நலனுக்கும் அரசாங்கம் செலவிடும் பணம் வெறும் பத்து கோடிகள் தான்.
எமது தூதரகங்கள் உங்களை சரியாக மதிப்பதில்லை. எமது அரசாங்கம் உங்களுடைய பிரிசினைகளை தீர்த்து வைப்பதில் கரிசனை காட்டுவதில்லை. அரசாங்கம் உங்களுக்காக செலவு செய்வதில்லை. உங்களது தொழிலுக்கு ஏதும் நடந்து நீங்கள் நாடு திரும்பினால் ஏன்ன செய்வது ஏன்று உங்களுக்கு தெரியவில்லை. அதற்கு அரசாங்கம் இதற்காக எந்த வொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை . இன்னொரு தொழிலை தேடிப்பெறும் வரைக்கும் உங்களுக்கொரு ஊதியத்தை அரசாங்கம் தருவதில்லை. உள்ளூர் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் உங்களை திரும்பி பார்த்ததே இல்லை . தேர்தல் வந்தால் நீங்கள் வெறும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளராகவே வைக்கப் பட்டிருக்கிறீர்கள். உங்களக்கு வாக்களிக்கும்வசதியாவது தரப்படவில்லை. உங்களில் சிலர் வெளிநாட்டில் இருப்பதால் உங்கள் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை இல்லாமல் போனது. வெளி நாட்டில் வாழும் உங்களுகென்று குறைந்த கட்டணத்தில் ஒரு பாடசாலை அமைக்கப்படவில்லை . முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் சில இடங்களில் நிரந்தர தூதரக அலுவலகம் அமைக்கப்படவில்லை கஷ்டப்பட்டு நீங்கள் உழைத்த பணத்தை இறுதியில் உங்கள் பிள்ளைக்கு பல்கலைக்கழகம் இல்லை ஏன்பதற்காக கோடி செலவு செய்து படிக்க வைக்கவேண்டிய துர்பாக்ய நிலை. உங்களுக்கு ஏதும் நேர்ந்தால் உங்களின் குடும்பத்தின் நிலை பரிதாபமாகிவிடும்.
வெளிநாட்டி இருப்போர் மற்றும் அவர்களில் தங்கி வாழ்வோர் என நாங்கள் ஒன்றுபட்டால் இந்த நாட்டின் ஆட்சியைக்கூட மாற்றலாம் இவ்வாறான நிலையில் அண்மையில் வெளிவந்த 19 வது அரசியல் திருத்தத்தின் ஊடாக இன்னொரு நாட்டின் பிரஜாஉரிமையை கொண்டுள்ள இலங்கையர் பாராளமன்ற உறுப்பினராகக் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் இவாவாறன நிலை இல்லை என்றும் தெரிவித்த பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார், புலம்பெயர் அமைப்புக்களும் தனிநபர்களும் ஒன்றுபட்டு அரசுக்கு அழுத்தங்களை கொடுப்பதன் ஊடாக நாம் இழந்து நிற்கும் உரிமைகளை பெற வருமாறு அறைகூவல் விடுத்தார்.