ஜவ்பர்கான்
மட்டக்களப்பு– கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இடம் பெற்ற விபத்துச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற மட்டக்களப்பு டிப்போவிற்கு சொந்தமான இலங்கை கோக்கு வரத்துச்சபை பஸ்இ டீசல் நிரப்புவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டியின் பின்னால் மோதியது.தனியார் பஸ் அதற்கு முன்னால் நிறுத்தி இருந்த டிப்பர் வாகனத்தில் மோதியபோது இ.போ.ச பஸ்ஸில் பயணத்த இருவர் காயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக இ.போ.ச பஸ் மற்றும் தனியார் பஸ் வண்டிகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் சில மணிநேரம் போக்குவரத்தும் தடைப்பட்டது.
காத்ததான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.