கடலுக்குச் சென்ற தங்க ரூபனுக்கு என்ன நடந்தது ஆயிரக்கணக்கான மக்கள் வீதிமறியல் போராட்டம்!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

திருகோணமலை சாம்பல் தீவைசேர்ந்த தங்கரூபன் 26 வயது எனும் இளைஞன் கடந்த திங்கள் அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று அங்கு அவரை சிலர் தாக்கியுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டாரா, அல்லது கடத்தப்பட்டாரா என்ற சந்தேகத்தில் அக்கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11960243_497341330444732_3621724992356474020_n_Fotor

தங்கரூபனுக்கு நடந்தது என்ன நீதி வழங்குங்கள். என்று அக்கிராமத்தில் இருந்து ஆயிரக்கனக்கானோர் வீதியை மறித்து பெரும்போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களைச் சந்திக்கச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கல்வி அமைச்சர் தண்டாயுத பாணி ஆகியோர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத வலைகள் பாவித்து மீன் பிடிப்பதை முற்றாக நிறுத்த வேண்டும், காணாமல்போன தங்கரூபனின் முடிவு உறுதி செய்யவேண்டும், சம்மந்தப்பட்டவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை வீதிப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரமாட்டோம் என்று பொதுமக்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து உடனடியாக தனிக்குழு அமைத்து குறிப்பிட்ட பிரச்சனைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு உத்தவிட்டார். அதனைத் தொடர்ந்து இவ்வாரத்திற்குள் போராட்டம் நடாத்திய பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அவசர தீர்வுகள் பெற்றுத் தரப்படும் கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டமைக்கிணங்கா பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

குறிப்பிட்ட நிகழ்வில் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர் ஜனா, மாவட்ட அரசாங்க அதிபர் புஷ்பகுமார் ஆகியோரும் குறிப்பிட்ட இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

11921713_497330383779160_9171331065522181791_n_Fotor 11947634_497330280445837_1862584947950690786_n_Fotor 11949459_497329317112600_567673465094296332_n_Fotor