மட்டக்களப்பில் கடல் மீன்களுக்குத் தட்டுப்பாட்டினால் வாவி மீன்களுக்கு அதிக கிராக்கி!

[t;gh;fhd;

மட்டக்களப்பில் கடல் மீன்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதனால் வாவி மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தற்போது மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ளதனால் கடலுக்குச் செல்லுதல் மற்றும் கடல் நீரின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிப்பதனால் கடல் மீன் பிடியில் பாதிப்பு ஏற்பட்டள்ளதாக மீன் பிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
b_Fotor
இந்நிலையில் வாவியில் மீன்படி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டள்ளதனால் செத்தல், மணலை மற்றும் கோல்டன் மீன்கள் பிடிபடுவதாக வாவித் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வாவியில் மீன் பிடிப்போரும் வெப்பநிலை அதிரிப்பினால் வாவியில் நீர் வற்றியுள்ளதோடு நீpன் மேற்பரப்பும் வெப்பமேறுவதனால் இரவினிலும் மற்றும் அதிகாலையிலும் மீன்களைப் பிடிப்பதாகத் தெரிவித்தனர்.
குறித்த வகையான மீன்கள் சில்லறையாக ரூபாய் 300 முதல் 500 வரை விற்பனை செய்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வாவி மீன்பிடியை நம்பி 13,265 மீனவக் குடும்பங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
g_Fotor f_Fotor