கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட 11பேர் கைது செய்யப்பட்டு எதிர் வரும் 8.9.2015 வரை விளக்கமறியல்!

arrestஜவ்பர்கான்

 

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை(21.8.2015) மாலை இடம் பெற்ற கலவரத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு எதிர் வரும் 8.9.2015 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

 

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் படடியலில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் பாராளுமன்ற உறுப்பினராக இடம் பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து பட்டாசுகள் வெடிக்க வைத்து ஆரவாரம் ஊர்வலம் என்பன இடம் பெற்றன.

 

இதன் போது இடம்இடம் பெற்ற கலவரத்தில் 11 பேர் காயமடைந்ததுடன் காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலுக்குள் புகந்து சிலர் பள்ளி வாயலை தாக்க முற்பட்ட சம்பவமும் காத்தான்குடி கடற்கரை வீதி மத்தியமகா வித்தியாலய சந்தியிலுள்ள ஹோட்டல் கடைக்கும் சேதம் ஏற்பட்ட சம்பவமும் சிலர்களை தாக்கிய சம்பவமும் இடம் பெற்றன
இந்த சம்பவங்களோடு தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு எதிர் வரும் 8.9.2015 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த சனிக்கிழமையன்று ஏழு பேர் கைது செய்யப்பட்டு
(25.8.2015) செவ்வாய்க்கிழமை வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

 

இன்று மீண்டும் அவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர் வரும் 8.9.2015ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

 

அத்தோடு இந்த சம்பவத்துடன் தொடர்;புடையவர்கள் என குறிப்பிடப்படும் ஏனைய சந்தேக நபர்களையும் தேசிய தௌஹீத் ஜமா அத் பள்ளிவாயலை தாக்க முற்பட்ட ஏனைய சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் காத்தான்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்

 

தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலுக்குள் புகுந்து பள்ளிவாயலை தாக்க முற்பட்டமை மற்றும் ஹோட்டல் ஒன்றை சேதப்படுத்தியமை ஆகிய இரண்டு சம்பவங்கள் வௌ;வேறான இரண்டு வழக்குகளாக பதியப்பட்டுள்ளதாக சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரான கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் செவ்வாய்க்கிழமை (25.8.2015) பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றதில் ஆஜர்படுதப்பட்ட போது அவரையும் எதிர் வரும் 8.9.2015 வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

 

இதில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவர் கல்விப் பொதுதததராதர உயர் தரப்பரீட்சை எழுதுவதால் குறித்த மாணவர் கடந்த சனிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
மேற்படி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பரீPட் தேர்தல் அதிகாரிகளை காத்தான்குடியில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.