விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கையில் எவ்­வித முறை­கே­டு­களும் இடம் ­பெ­ற­வில்லை!

Mahinda-Deshapriya-415x260

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கையில் எவ்­வித முறை­கே­டு­களும் இட­பெ­ற­வில்லை என தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

 

விருப்பு வாக்­குகள் எண்­ணப்­ப­டும்­போது முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக, சில நாட்­க­ளாக பல குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்,

தேர்­தல்கள் தொடர்பில் மக்கள் மத்­தி யில் நன்­ம­திப்பு ஏற்­பட்­டுள்ள நிலையில் அவற்றை சீர்­கு­லைக்கும் வகையில் இக்­குற்­றச்­சாட்­டுக்கள் அமைந்­துள்ளன.விருப்பு வாக்­குகள் எண்­ணும்­போது வேட்­பா­ளர்­களின் முக­வர்கள் மற்றும் தேர்தல்கள் செயலக அதி­கா­ரிகள் இணைந்து செயற்­படும் போது இவ்­வா­றான முறை­கே­டுகள் நடை­பெற முடி­யாது.

ஐ.தே.க.வில் போட்­டி­யிட்டு தோல்­வியை தழு­விய முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ரோஸி சேனா­நா­யக்க, தமது விருப்பு வாக்­குகள் எண்­ணப்­பட்ட விதம் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தென குறிப்­பிட்­டுள்­ள­தோடு, அதனை மீள எண்­ணு­மாறு பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். அதேநேரம் அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளுக்கும் தேர் தல் முடி­வுகள் வெளியா­ன­போது குறிப்­பி­டப்­பட்ட வாக்கு எண்­ணிக்­கைக்கும் வித்­தி­யாசம் காணப்­ப­டு­வ­தா­கவும், இது குறித்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தேச விடுதலை கட்சியின் தலைவர் கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.