சம்பூர் மக்களுக்கு உரித்தான காணிகளை கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றுவதற்கு கிடைத்தமையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதோடு, இதனை பெரும் கௌரவமாகவும் கருதுகிறேன்.
இவ் ஒற்றை நிகழ்வானது யுத்தத்திற்குப் பிந்திய அபிவிருத்தியின் மீது மக்கள் வைத்துள்ள அசையாத நம்பிக்கையினையும் விசுவாசத்தினையும் பலப்படுத்தும் அதேவேளை கிழக்கு மாகாண மக்களின் அரசியல் மற்றும் பெருளாதார சுதந்திரத்தில் புதிய அத்தியாயத்தை தோற்றுவித்துள்ளது.
கிழக்கு மக்களுக்கு உரித்தான நிலங்களை விடுவிக்கும் செயல்முறைக்கு தனது ஆசிர்வாதத்தை வழங்கியும் அரசியல் அர்ப்பணிப்பின் அடையாளமாகவும் இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு வருகை தந்துள்ள அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களை முதன்முதலில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாளில் அவர்களின் வருகை மென்;மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனென்றால், எமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள உலக சாதனை நிகழ்வை சமப்படுத்தும்படியாக நான்காவது தடவையாகவும் பிரதம மந்திரியாக பதவியேற்றுள்ள கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் புதிய அரசாங்கத்தின் சத்தியப்பிரமாண நிகழ்விற்குப் பின்னர் அவர்கள் கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்வாக இது அமைந்துள்ளமையாகும்.
இத்தகைய பேறினை வழங்கியமைக்காக கிழக்கு மாகாண மக்கள் சார்பாக அதிமேதகு ஜனாதிபதிக்கு எனது புகழாரத்தை சூட்ட விரும்புகின்றேன். மேலும் முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஒஸ்டின் பெர்ணாண்டோ அவர்களுக்கும் விசேட வரவேற்பினை அளிக்க விரும்புகின்றேன்.
இன்று நாம் பாரம்பரிய நிலங்களுக்கு உரித்தான உரிமையாளர்களுக்கு நிலங்களை நியாயமான முறையில் கையளிப்பதன் மூலமாக நீண்ட காலமாக யுத்தத்திற்கு பிந்திய பிரச்சினையாக உருவெடுத்துள்ள உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த சம்பூர் மக்களின் மீள்குடியேற்ற பிரச்சனையை தீர்த்துவைக்கின்ற செயல்முறையை ஆரம்பித்து வைத்துள்ளோம்.
2006ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததன் பின்னர் மோதல்நிலை ஆரம்பித்ததை தொடர்ந்து அரசாங்கப் படைகள் சம்பூர் உட்பட மூதூர் கிழக்குப் பகுதியினை கைப்பற்றியதன் விளைவாக ஏப்ரல் மாதம் 2006ஆம் ஆண்டு இப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இடம்பெயர்ந்த மக்கள் முதலில் வெருகல் பிரதேசத்திற்கும் பின்னர் வாகரை ஊடாக மட்டக்களப்பிற்கும் இடம்பெயர்ந்து அங்கு 17 நலன்புரி நிலையங்களில் குடியமர்த்தப்பட்டனர். பெரும்பாலான மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற்றப்பட்ட போதும் சம்பூர் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இந்திய அரசாங்கத்தின் உதவியின் ஊடான அனல் மின்சார நிலைய நிர்மாணிப்பிற்காக இக் காணிகள் ஒதுக்கப்பட்டதன் காரணமாக சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தடைப்பட்டிருந்தது.
இதன் பின்னர் முன்னைய அரசாங்கம் சூழவுள்ள 850 ஏக்கர் நிலப்பகுதியினை விசேட பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தியபோது சம்பூர் மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை மேலும் உக்கிரமடைந்தது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே!
நாம் அனைவரும் அறிந்தது போன்று உலக அரசியல் வரலாற்றில் நிலபுலங்கள் என்பது பொதுமக்களின்; கிளர்ச்சிகளுக்கும் புரட்சிகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் மிக அடிமட்ட காரணிகளாக இருந்து வந்துள்ளது. மனித குலத்தின் அடிப்படை பண்பாக தாம் வாழ்கின்ற பாரம்பரிய முதாதையர்களின் நிலங்கள் மீது மக்கள் உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். சம்பூர் மக்களின் இத்தகைய அடிப்படை உரிமை மிக நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களதும் கௌரவ பிரதம மந்திரி அவர்களதும் தூர நோக்குள்ள அரசியல் தலைமைத்துவத்தின் பயனாக இன்று நாம் மக்களுக்கு உரித்தான காணிகளை உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வை அனுபவிக்கின்றோம். இத்தகைய சந்தர்ப்பத்தில் மக்கள்நேய அரசியல் தீர்மானங்களை தாங்கள் எடுத்தமைக்காக சம்பூர் மக்களினால் தாங்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூறப்படுவீர்கள்.
தமது நிலங்களுக்கு அவர்கள் திரும்பிச் செல்ல அனுமதிப்போடு மட்டும் தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாறாக மக்களுக்கு அவர்களது குழந்தைகளும் திருப்தியுடன் சந்தோஷமாக வாழ்கின்ற நிலையினையும் தாங்கள் உருவாக்குவீர்கள் என்பது எமது அசையாத நம்பிக்கை ஆகும்.
இச் சந்தர்ப்பத்தில் சம்பூர் மக்களின் இப்பிரச்சினைக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த தமி;ழ் தேசிய கூட்டமைப்பிற்கும் குறிப்பாக அதன் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கும் நன்றி கூறுகின்றேன். மேலும்; இதனை யதார்த்தமாக்குவதில் எனக்கு பக்கபலமாக ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியுடைவனாவேன்
கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் என்ற வகையில் மக்களின் சார்பாக கிழக்கு மாகாணத்தில்; மக்களால் எதிர்நோக்கப்படும் சமூக பொருளாதார சவால்களை தங்களின் முன் சமர்ப்பிப்பது எனது கடமையாகும்.
யுத்தம் முடிவடைந்து 06 வருடங்கள் உருண்டோடியும் கிழக்கு மாகாண மக்களினால் எதிர்நோக்கப்படும் சில பாரிய சவால்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவற்றில் வறுமை ஒழிப்பு என்பது மிக முக்கியமான பிரச்சினையாகும்;. இம் மாகாணத்தில் வறுமையானது பரவலாக பரவிக் காணப்படுகின்றது. மாகாணத்தின் தற்போதைய வறுமை மட்டம் 10.8 ஆகும். தேசிய அளவில் காணப்படும் 6.9 விட இது உயர்ந்ததாகும். யுத்தத்திற்குப் பிந்திய சூழலில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாய்ப்புக்களில் இருந்து நன்மை பெறுகின்ற மக்களின் இயலுமையை நிச்சயப்படுத்துவதற்கும் வறுமை சந்ததிகளுக்கிடையே கடத்தப்படுவதனை தடுப்பதற்கும் மனித மூலதனத்தில் அதிகரித்த முதலீடுகள் அவசியமாக உள்ளது. கிழக்கு மாகாணத்தின் யுத்தத்திற்குப் பிந்திய நிலைப்பாடுகளை கவனத்திற் கொண்டு கிழக்கில் மத்திய அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தினை அமுலாக்குவதில் மத்திய அரசிற்கு நாம் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளோம்.
கல்வித்துறை சார் உட்கட்டுமானம் என்ற வகையில் கல்வித் துறையில் அனேகமான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் கல்வித் துறையில் மனிதவளப் பற்றாக்குறை என்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. பயிற்றப்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை என்பது மாகாணத்தின் அநேக பாடசாலைகளில் தீவிரமான பிரச்சினையாக உள்ளது. மாகாணத்தில் அதிக கேள்வியுடைய தொழில்சார் துறைகளில் குறைவான திறன்மட்டம் நிலவுகின்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்களிடம் தொழில்சார் திறன்களும் தகைமைகளும் குறைவாக காணப்படுவதால் மாகாணத்திற்கு வெளியிலுள்ள இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இக்குறைபாடு கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் தெளிவாக புலப்படுகின்றது. உள்ளுர் இளைஞர்களின் திறன்களை விருத்தி செய்யும் அதேவேளை கிழக்கு மாகாணத்தில் அதிக கேள்வி உள்ள திறன்சார் துறைகளை உருவாக்கும் வண்ணம் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சிகள் என்பவற்றில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளுடன் சார்ந்த புதிய தொழில்நுட்பத்துறைகளில் முதலீடு செய்ய வேண்டிய தேவையும் சமூகத்திலுள்ளோர் சந்தைப்பரப்பில் போட்டித் தன்மையை நிச்சயப்படுத்தும் வகையில் இத்தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கள் தொடர்பான முதலீடுகளும் அவசியமாகின்றது.
யுத்தத்தின் விளைவாக தொழில்வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தின் தொழிற்படை பங்குபற்றல் வீதம் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே காணப்படுகின்றது. மாகாணத்தின் தொழில் இன்மை வீதமானது தற்போது 4.9மூ ஆகக் காணப்படுகின்றது. இது தேசிய ரீதியான தொழில் இன்மை வீதத்துடன் ஒப்பிடும் போது 4% அதிகமானதாகும்.
அதீத வறுமை, வேலை வாய்ப்புக்கள் இன்மை மற்றும் தொழில்வாய்ப்புக்களின் பற்றாக்குறை காரணமாக அனேக பெண்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர் தொழிலாளிகளாக அதுவும் வீட்டுப் பணிப்பெண்களாக செல்கின்றனர்.
வருடாந்த புள்ளிவிபரங்களை நோக்குமிடத்து கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் தொகையில் தொடர் தேர்ச்சியான அதிகரிப்பு காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை முழு இலங்கையில் இருந்தும் 2011 – 2014 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டிற்குச் சென்ற பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது வருடாந்த அதிகரிப்பைக் காட்டுகிறது. அதாவது 2011இல் 11 வீதமாகவும் 2012இல் 11.8 வீதமாகும் 2013இல் 11.6 வீதமாகவும் 2014இல் அதிகபட்சமாக 13.9 வீதமாகவும் அதிகரித்துச் செல்வதைக் காணலாம். இந்நிலைமை சமூக கலாச்சார சீரவுகளான சிறுவர் துஷ்பிரயோகம், மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாதல் போன்ற பாரிய பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது. மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்தில் பெண்கள் மற்றும் கல்வி கற்ற இளைஞர்கள் மத்தியில் நிலவும் வேலை வாய்ப்பின்மை வீதம் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது மிக உயர்வாக காணப்படுகின்றது. இந்நிலை இப் பிராந்தியத்தில் தொழில் வாய்ப்புக்களின் பற்றாக்குறையை எடுத்துக் காட்டுகின்றது.
கிழக்கு மாகாண மக்களினால் எதிர் கொள்ளப்படும் யுத்தத்திற்குப் பிந்திய சவால்களில் பெரும்பாலானவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களின் பலவீனமான பொருளாதார இயலளவுடன் தொடர்புபட்டதென நான் தனிப்பட்ட வகையில் நம்புகின்றேன். கிழக்கின் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கான நிலைபேறான தீர்வானது கிழக்கில் விவசாய மற்றும் கைத்தொழில்துறை முதலீடுகளை உக்குவிப்பதாகவும் உறுதிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தற்போதுள்ளதைப் போன்று அல்லாது மக்கள் மத்தியில் சிறந்த பணச்சூழச்சியும் கொள்வனவுசக்தியும் அதிகரித்துக் காணப்பட்டது என்ற கருத்துஃ அபிப்பிராயம் நிலவுகின்றது.
எனவே, தனிநபர்களின் பொருளாதார இயலளவை கட்டி எழுப்புதல் சிரமப்பட்டு பெற்ற சமாதானத்தை நிலைபேறானதாக ஆக்குவதற்கான வழியாகும். இயற்கை வளங்களால் நிறையப்பெற்ற கிழக்கு மாகாணத்தில், இதனை இலகுவாக அடைந்து கொள்ளலாம். பிரதானமாக விவசாயம், பால் உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகளில் பிராந்திய ஒப்பீட்டு நன்மையை அதிகரிப்பதன் மூலம் இதனை இலகுவாக அடைந்து கொள்ளலாம்.
ஆனால், முதலீட்டு மேம்பாடு மற்றும் கைத்தொழில் மேம்பாட்டிற்கு பொறுப்பான முகவர் நிறுவனங்கள் பிராந்திய ஒப்பீட்டு நன்மையை பயன்படுத்துவதற்கு பதிலாக தமது நாளாந்த வழமையான கடமைகளிலேயே மும்முரமாக ஈடுபட்டுள்ளமையே நாம் இதுவரை கண்ட உண்மையாகும். பிறிமா தொழிற்சாலை மற்றும் டோக்கியோ சீமேந்து தொழிற்சாலை போன்ற பாரிய முதலீட்டு முயற்சிகள் யுத்த காலப்பகுதியிலேயே இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009இல் சமாதானம் மலர்ந்ததற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரிய தனியார் முதலீடுகளை நாம் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனங்கள் ஃ முகவர்கள் கிழக்கு மாகாணத்தின் யுத்தத்திற்குப் பிந்திய முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய தமது கடமையில் இருந்து தவறியுள்ளன என்ற உண்மையினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இச் சூழலில் தான் கிழக்கு மாகாணசபையில் வியாபாரம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரிவு (டீரளiநௌள யனெ ஐnஎநளவஅநவெ கயஉடைவையவழைn ருnவை) நிறுவப்பட வேண்டுமென எமது முன்மொழிவை முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்நிறுவனம் தனியார் முதலீடுகளை மாகாணத்தினுள் ஊக்குவிக்கக்கூடிய போதிய அதிகாரத்தினையும் இயலளவையும் கொண்டிருப்பதோடு முதலீட்டு மற்றும் கைத்தொழில் ஊக்குவிப்புக்கென அமைக்கப்பட்டுள்ள மத்தியஅரசாங்கத்தின் முகவர் நிறுவனங்களுடன் மிகநெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பிராந்திய ஒப்பீட்டு நன்மை என்ற தந்திரோபாயத்தின் வழியில் சென்று அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 03 கைத்தொழில் வலயங்களையும் 03 விவசாய உற்பத்தி வலயங்களையும் ஸ்தாபிப்பதற்கான உடன்பாட்டை கிழக்கு மாகாண அமைச்சர்கள் வாரியம் எட்டியுள்ளது. ஒவ்வொரு கைத்தொழில் வலயமும் 100 ஏக்கரிலும் ஒவ்வொரு விவசாய உற்பத்தி வலயமும் 1000 ஏக்கரிலும் அமையப்பெறவுள்ளது. இவ்வலயங்களுக்கு நிலங்களை ஒதுக்குவதைத் தவிர உட்கட்டுமான அபிவிருத்தி என்பது குறைவானதே. அடிப்படையான உட்கட்டுமானத்துடன் கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்தி வலயங்களை இயங்கச் செய்யமுடியும். எவ்வாறாயினும் இவ்விவசாய மற்றும் கைத்தொழில் வலயங்கள் மூலம் அடையப்பெறும் பொருளாதார மற்றும் சமூகப் பயன்கள் அதிகமானதாகவும் நீடித்து நிலைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
பயன்படுத்தப்படாத இயற்கை வளங்களையும் சக்தி மிக்க இளைமைத் துடிப்புள்ள தொழிற்படையையும் கொண்டுள்ள கிழக்கு மாகாணம், முதலீட்டாளர் நேயமுள்ள ஆட்சியின் ஆதரவுடன் 500 மில்லியன் டொலரிற்கும் அதிகமான நேரடி வெளிநாட்டு முதலீட்டினை கவரக்கூடிய மிக உயர்ந்த வாய்ப்பினை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மூலம் அடுத்துவரும் 2-3 ஆண்டுகளில் 50.000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம். குறுகிய காலநோக்கில், விளைதிறன்வாய்ந்த வகையில் கிழக்கு மாகாணம் சந்தைப்படுத்தப்படுமாயின் தேசிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு இலக்கில் ஆகக் குறைந்தது 200 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு பங்களிப்புச் செய்யமுடியும்.
மாகாணத்தின் முதலீட்டின் ஊக்குவிப்பு முயற்சியினை மேலும் உயர்த்தும் நோக்கில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சு முதற்தடைவையாக 20 நாடுகளின் பங்குபற்றுதலுடன் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடு ஒன்றினை கடந்த வருடம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இம்மாநாடு வெற்றியடைந்ததுடன் இம் மாநாட்டின் போது ஆராயப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்கள் தற்போது முதலீட்டுத் திட்டங்களாக மாறியுள்ளன. இதே போன்றதொரு இரண்டாவது “ கிழக்கில் முதலீடு” என்ற தொனிப்பொருளிலான மாநாட்டை இவ்வருட இறுதிக்கு முன்னர் ஏற்பாடு செய்வதற்கான நம்பிக்கை எமக்குள்ளது.
முடிவாக, அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் நான் விடுக்கும் பணிவான வேண்டுகோள் என்னவெனில் கிழக்கு மாகாணத்தினுள் வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையில் கிழக்கினை வெளி உலகிற்கு ஒரு முதலீட்டு வாய்ப்புள்ள பிராந்தியமாக எடுத்துக்காட்டுவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உதவ வேண்டுமென்பதாகும். இதன் மூலம் நாம் இரத்தம் சிந்திப்பெற்ற சமாதானத்தினை நிலைபேறானதாக்க முடிவதோடு கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பிரச்சினைகளைஃவடுக்களை ஆற்ற முடியுமென்பது எமது நம்பிக்கையாகும். தயவுசெய்து, முன்மொழியப்பட்ட 3 கைத்தொழில் வலயங்களுக்கும் 3 விவசாய உற்பத்தி வலயங்களுக்கும் ஆதரவு வழங்குவது பற்றி கவனத்திற்கொள்ளுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் பிராந்திய வியாபார மற்றும் முதலீட்டு உக்குவிப்புப் பிரிவினை போதிய அதிகாரங்களுடன் தாபிப்பதற்கும் எமக்கு உதவுமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றேன்.
இந்நிறுவனத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு ஊக்குவிப்பை துரிதப்படுத்தவும் வேலைவாய்ப்பினை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தங்களது இந்த உதவியானது யுத்தத்திற்குப் பிந்திய சமூகப் பொருளாதார பிரச்சனைகள் பலவற்றை தீர்ப்பதற்கான நிலையான கைங்கரியமாக அமையும்.
இறுதியாக, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வைபத்திற்கு வருகை தந்தமைக்காக அவர்களுக்கு எமது ஆழ்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு, இலங்கை தேசத்தின் வரலாற்றின் மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் தாங்கள் தற்போது ஆரம்பித்துள்ள புதிய ஆட்சி என்ற பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வெற்றியும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசிகளும் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
இச்சபையிலிருந்து விடைபெறுவதற்கு முன்னர், கிழக்கு மாகாண மக்களின் நன்றியினதும் ஆகர்ஷிப்பினதும் அடையாளமாக விளங்கும் விசேட நினைவுச் சின்னமொன்றை அதிமேதகு ஜனாதிபதியின் சேவையினைப் பாராட்டி கையளிக்க விரும்புகின்றேன். இந்நினைவுச் சின்னத்தை தயைகூர்ந்து ஏற்றுக் கொள்ளும்படி அதிமேதகு ஜனாதிபதி அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.