முதலாவது ஹாஜிகளை ஏற்றிய விமானம் நாளை மக்கா நோக்கிப் பயணம்!

Unknownஏ.எஸ்.எம்.ஜாவித்

புனித ஹஜ் கடமைக்கான முதலாவது தொகுதி ஹாஜிகளை ஏற்றிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மக்காவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி பயணமாகவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார்.

முதலாவது தொகுதியில் சுமார் 217 ஹாஜிகள் பயணிக்கவுள்ளனர் இவர்களை உத்தியோக பூர்வமாக வழியனுப்பி வைக்கும் வைபவம் நாளை (25) காலை 11.00 மணிக்கு விமான நிலையத்தில் இடம் பெறவுள்ளது. இதன்போது இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதரகதூதுவர், கவுன்சிலர் உள்ளிட்ட அதிகாரிகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகாரிகள், ஹஜ் முகவர்கள், ஹஜ் குழு அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விமான சேவைகள் எதிர் வரும் செப்டம்பர் 17ஆம் திகதி வரை இடம் பெறும் சேவையில் இலங்கையிலிருந்து சுமார் 2240 ஹாஜிகள் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.