இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றச்சாட்டுகளில் இருந்து அமெரிக்கா விடுவிக்கவுள்ளது !

Unknown

இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றச்சாட்டுகளில் இருந்து அநத நாட்டை அமெரிக்கா விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றச்சாட்டுகளில் இலங்கையை அமெரிக்கா விடுவிக்கவுள்ளது.இலங்கை படையினர் ஜெனீவா பிரகடனத்தின் நாலாவது வரைவுடன்பாட்டை பின்பற்றினர் என தெரிவித்தே அமெரிக்கா இதனை மேற்கொள்ளவுள்ளது. குறிப்பிட்டவரைவுடன்பாடு யுத்தவேளையில் பொதுமக்களை காப்பாற்றுவது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர் இதனால் படையினர் பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய நிலை காணப்பட்டது , இதனால் யுத்த குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அமெரிக்கா குறிப்பிடவுள்ளது,.
செப்டம்பரில் வெளியாகவுள்ள இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின்  அலுவலகத்தின் விசாரணை அறிக்கையில் இலங்கையின் முப்படை அதிகாரிகள் 43 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது