எனவே வாக்களித்த அனைவருக்கும் நன்றியனைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நடந்து முடிந்திருக்கும் இத்தேர்தல் நல்ல செய்தி ஒன்றினை இந்நாட்டுக்கும் உலகத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கிறது.
மக்கள் அனைவரும் ஒன்றினைந்து நாட்டில் நல்லதொரு ஆட்சி இடம்பெற வேண்டும் அமைதியான சூழலும் அதற்கேற்ற வாழ்வாதார நடைமுறையினையும் இப்புதிய அரசு குறைவில்லாமல் வழங்கும் என்ற நம்மிக்கையில் மக்கள் இன்று வாக்களித்து சிம்மாசனம் ஏற்றியுள்ளனர்.
எனவே புதிய அரசு மக்களுக்கான சிறந்த ஆட்சியினைச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை ஆட்சியின் பங்காளர்களாக இணைந்து கை கொடுத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளும் மக்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கான ஆட்சியாக இவ்வாட்சியை மாறியமைக்கவும், பயன் படுத்தவும் தங்களின் நடவடிக்கையினை மாற்றிக்கொள்ளுதலும் கட்டாயத் தேவையாகும்.
சமூக நலன் கருதி மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், ஏனைய மாவட்டங்களில் கட்சி வேட்பாளர்களுக்கும், குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் மூன்று ஆசங்களையும் பெறுவதற்கு வாக்களித்த மதிப்புமிகு கட்சிப்போராளிகளுக்கும், வேட்பாளர்களாக களமிறங்கி கட்சியின் வளர்ச்சிக்கும் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்தவர்களுக்காகவும், தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியுடனான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தனதறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.