நீதிபதியின் உத்தரவின் பெயரில் அனுமதியற்ற முறையில் வைக்கப்பட்ட சிலை அகற்றம் !

11863251_569935396479346_3089014142251368763_n_Fotor

 

தாஜகான்

பொத்துவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அருகாமையில் அமைந்துள்ள அரசாங்க காணியினுள் நேற்று நள்ளிரவில் இனந்தெரியாத நபர்களால் இரண்டு சிலைகள் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்த சிலை வைப்பினைத் தொடர்ந்து பொத்துவில் ஊரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலைமையில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் தலைமையில் குறித்த அரசகாணியினுள் அனுமதியற்ற முறையில் சிலைவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டை செய்தனர். முறைப்பாட்டை அடுத்து குறித்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு பொத்துவில் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பெயரில் அனுமதியற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளையும் அங்கு சிலைவைக்க கட்டப்பட்ட கட்டினையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்தை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிலை மற்றும் கட்டுமானம் என்பன அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்த அடுத்த கட்ட வழக்கு விசாரனை அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இச்செயற்பாடட்டில் முற்றுமுழுதாக தன்னை அர்ப்பணித்து இன முரண்பாட்டை ஏற்படவிடாமல் அறிவு பூர்வமாக தடுத்த பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்களுக்கு பொத்துவில் மக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர். மேலும்
இந்த செயற்பாட்டில் ஒற்றுமையுடன் செயற்பட்ட இளைஞர்கள், ஊரின் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் அனைவரும் நன்றிகளை தெரிவிக்கின்றனர். 

வெள்ளம் வருமுன்னே வாய்கால் இடல் அவசியம் இந்த மைதானத்தின் எல்லை மற்றும் குறித்த புனரமைப்பு பணிகளை ஊரின் நலன் கருதி செயற்படுபவர்கள் முன்னின்று உழைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் இவ்வாறான அறிவுபூர்வமான அணுகுமுறை கொண்டிருந்தால் சைத்திய போன்ற விடயங்களையும் தடுத்திருக்கலாம். கருத்து வேறுபாடுகளை துடைத்தெரிந்து ஊரின் நலனில் ஒன்று படுவோம்