ஐக்கிய தேசியக் கட்சி 93 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு முன்னிலை வகிக்கின்றது !

LION 3

 

93 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் வெளியான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 93 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகிக்கின்றது.

மொத்தமாக இதுவரையில் 22 மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 5,098,927 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு 93 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4,732,669 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு  83 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி  515,963  வாக்குகளைப் பெற்றுக்கொண்டு 14 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி கட்சி 543,944  வாக்குகளைப் பெற்றுக்கொண்டு 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 44193 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது 

ஈ.பி.டி.பி. கட்சி 33,481 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

தேசியப்பட்டியல் ஆசனப் பங்கீடுகள் இன்னும் வெளிவரவில்லை .

 

Screen Shot 2015-08-18 at 12.12.04