இன்று காலை 07.00 மணிமுதல் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகும் !

parliment

இம்முறை பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் என்பனவற்றை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று பிற்பகலுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி  இன்று  காலை 07.00 மணிமுதல் வாக்காளர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. 

இம்முறை தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றுள்ளனர். 

மேலும் நாடுபூராகவும் 12,312 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

அத்துடன் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் 1600 நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. 

191 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக முன்னெடுக்கப்படும் இம்முறை தேர்தலில், 6151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 

இவர்களில் 556 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.