அமீர் அலியின் தீவீர ஆதரவாளர் அமீனின் ஜனாஸா அமைதியான முறையில் நல்லடக்கம் !

 janasa

அஹமட் இர்ஸாட்

 VIDEO

ஓட்டமாவடி ஹுதா பள்ளி வீதி புகையிர கடவைக்கு அருகாமையில் வைத்து சனிக்கிழமை 15.08.2015 இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் வாழைசேனை பிரதேச சபைக்கான அகில இலங்கை மக்கள் சார்பாக போட்டியிட்டவருமான அமீனின் ஜனாஸா இன்று ஞாயிற்றுக்கிழமை 16.08.2015 மஃரிப் தொழுகைக்கு பிற்பாடு  ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமீனின் ஜனாஸா தொழுகையில் பங்குபற்றுவதற்காக பெரும் திரளான மக்கள் ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலுக்கு வருகைதந்திருந்தமையினை காணக்கூடியதாக இருந்த அதேவேலை தேர்தல் சுமுகமான முறையில் இடம்பெற வேண்டும் என்பதனை கருத்தில் கொள்ளப்பட்டு பிரதேசத்தில் எப்பொழுதும் போன்று அமைதி நிலைமை காணப்பட்ட வேண்டும் என்பதற்காக அமீன் கொலை செய்யப்பட்ட செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிற்பாடு பெரும் ஆத்திரமடைந்திருந்த பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர்கள் பிரதேசத்தின் தலைமைத்துவங்களுக்கு கட்டுப்பட்டு அமைதிகாத்த  நிலைமையினையும் முக்கியமாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

janasa 2