அமீர் அலிக்கு எதிராக 500 மில்லியன் ரூபா மான நஸ்ட ஈடு வழக்கு !

ameer ali
அஸ்ரப் ஏ சமத்

ஓட்டமாவடியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கு பிரதியமைச்சர்  அமீர் அலி அவர்கள் முஸ்லீம்காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் மற்றும்  ஓட்டமாவடியில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ரியாழ் ஆகியோரைச் சம்பந்தப்படுத்தி விசமத்தணமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இவ் விடயம் பற்றி ஊடகங்களிலும்  அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது இவரது வக்குரோத்து அரசியலைக் காட்டுகின்றது. இதன் முலம் அனுதாப வாக்குகளைப் பெற்று எப்படியோ எம்.பி யாகி விடலாம் என அவர் செய்யும் சூழ்ச்சியாகும். இது தேர்தல்  காலத்தில் இவ்வாறு அவர் கருத்து தெரிவிப்பது தேர்தல்  சட்டத்தினை மீறும் செயலாகும் இது பற்றி தேர்தல்  ஆணையாளருக்கும் அறிவித்துள்ளோம்.
இதற்காக எமது கட்சியின் சட்டத்தரணிகள் 500 மில்லியன் ருபா நஸ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. அதற்கான கடிதமும் அமீர் அலிக்கு சட்டத்தரணிகளால் அனுப்பி வைக்கப்படும். என கண்டியில் ்இருந்து அமைச்சர் ஹக்கீம் ஊடகச் செயலாளர்  டொக்டர் ஹாபீஸ் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
முஸ்லீம் கட்சியின் ்இருந்து அரசியல் முத்திரையை பெற்று
 அரசியல் வாதியாக வந்த அமீர் அலி மற்றும் அவர் கட்சித் தலைவர் தற்பொழுது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமைத்துவத்திற்கும் வீன் பழி சுமத்துகின்றார். 
இந்தக் கட்சிக்காகவோ எத்தனையோ உயிர்கள் இரத்தங்கள்  இந்த மண்னில் சிந்தப்பட்டுள்ளன. ஆனால் ஒருபோதும் இன்னொரு முஸ்லீம் சகோதரணைப் பழி கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை பாடு இந்தக் கட்சிக்கு கிடையாது.
ஓட்டாமாவடியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் பின்னால் யார்  உள்ளனர் என்பதை உரியா பொலிசார் சடடம் நீதி இருக்கும்போது  அமீர் அலி முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளருக்கும் கட்சியின் தலைவருக்கும் எதிராக  விரலை நீட்டுகின்றார். தோர்தல் காலத்தில் அப்பிரதேச வாக்குகளை கவர்வதற்கு வீன் பழி சுமத்துகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
 முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காக  மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்   உயிர் நீத்தார்கள்.  அதேபோன்று மடவலையில் 8 இளைஞர்கள், அதேபோன்று சாய்ந்தமருதுரில் இளைஞர் பழி பேருவளையில் இளைஞர்  பலி இவ்வாறு இக் கட்சிக்காகவே  கட்சித் தொண்டர்கள் இரத்தம் சிந்தி மடிந்த வரலாறு உள்ளது.  அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் போன்ற இதர ஆயுதக் குழக்கலாலும்  இக் கட்சியின் தொண்டர்கள் உறுப்பிணர்கள் மடிந்திருக்கின்றார்கள்.
 முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் இன்னொரு கட்சியின் ஆதரவலாரை கொலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இல்லை. இந்தக் கொலைக்கு பின் உள்ள சதி அந்தரங்கம் சம்பந்தப்பட்டவர்களை உரிய வா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும். இதனை  வெளிக்கெனர எமது தலைவரும் சட்டத்தரணிகளும் மக்கள் முன் தெரியவரும்.