முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற தலைவர் ரவூப் ஹக்கிமுக்கும் கல் குடா வாழ் முஸ்லி்ம் காங்கிரஸ் போராளிகளுக்குமிடையிலான சந்திப்பில் தலைவர் அங்குள்ள முக்கிய தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அதில் குறிப்பாக, வாழைச்சேனை ஹைராத் ட்ரான்ஸ் போட்டுக்கு ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலை நிர்மாணிப்பதற்காக போதிய இட வசதியில்லாத குறையையும் அங்குள்ள போராளிகள் தலைவருக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.
அதற்கமைய தலைவர் கட்சியின் நிதியொதுக்கீட்டிலிருந்து ஐம்பது இலட்சம் பெறுமதியான இடத்தைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். அதற்கமைய இன்று 13-08-2015ம் திகதி வாழைச்சேனை ஹைராத் ட்ரான்ஸ் போட்டுக்கான காணியின் நிதியொதுக்கீட்டை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரினால் ஹைராத் ட்ரான்ஸ் போட் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
மற்றும் அன்றைய தினம் ஓட்டமாவடி தியாவட்டவான் பள்ளிவாயலுக்கும் விஜயம் மேற்கொண்ட தலைவர் ஹக்கீம், அங்குள்ள பள்ளிவாயல் நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துடையாடினார். அதில் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் தங்களுடைய பள்ளிவாயலுக்கு மையவாடிக்கான போதிய இடப்பற்றக்குறையையும் கூறியுள்ளனர். அதற்கமைய தலைவர் தனது சொந்த நிதியலிருந்து 350000 மூன்றறை இலட்சம் தருவதாக வாக்களித்திருந்தார்.
மற்றும் அவருடன் பயணம் சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதும் தனது சொந்த நிதியிலிருந்து 350000 மூன்றறை இலட்சம் தருவதாக வாக்களித்திருந்தார்.
அதற்கமைய நேற்று பள்ளிவாயல் நிர்வாகத்தினரைச் சந்தித்த காங்கிரசிற்காகக் களமிறக்கப்பட்டிருக்கும் புதுமுக வேட்பாளர் றியாழ் அவர்களின் மூலம் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் முன்னியைில் பள்ளிவாயல் மையவாடிக்கான 700,000 ஏழு இலட்சம் ரூபா நிதியை பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.