முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எவ்வாறு சாத்தியமாகும்?

 

parlimentயூ.எல்.எம் ஹிபான்

 

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் பாராளுமன்றம் முஸ்லிம்களை பொறுத்தவரை மிக முக்கியமானது. ஏனெனின் நமது நாட்டில் நீண்டகாலமாக புரையோடிக்கிடந்துவரும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் செயற்பாட்டுக்கு முன்னுரிமை அழிக்க இருக்கின்றது. இதனை நமது நாட்டின் பெரும்பானமை கட்கிகளின் தேர்தல் விஞ்சாபனங்கள் வெளிப்படுத்தி உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலையில் அமையப்போகும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் அவசியப்படுகின்றது என்பதில் நாம் கருத்து வேறுபாடு கொள்ள முடியாது. ஆனால் எந்த கட்சியின் சார்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகரித்த ஆசனங்கள் உறுதி செய்யப்படவேண்டும். அது ஏன் அவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் முஸ்லிம் சமூகம் இன்று தமது கவனத்தை குவிக்க வேண்டிய கடப்பாட்டில் இருந்து விலகிவிட முடியாது.

இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் எனும் 03 முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை வகித்து வருகின்றன. இவற்றில் இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை வடக்கு கிழக்கு மாகணங்களுக்கு வெளியேயும் கொண்ட பெரும் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேரூன்றியுள்ளது. ஏனைய 02 கட்சிகளில் முன்னால் அமைச்சர் எ.எல்.எம் அதாவுல்லாவை தலைமையாக கொண்ட தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் மாத்திரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுகின்றது. அதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னனியுடன் இனைந்தும் திகாமடுல்ல மாவட்டத்தில் தனித்தும் போட்டியுடுகின்றது.

இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமான முன்னாயத்தங்களும் அதற்கான தீர்வு நகர்வுகளும் ஓரளவு கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே காலூன்றி இருக்கின்றது. மற்றைய 02 கட்சிகளின் தலைமைகளிடம் இனப்பிரச்சினை சம்பந்தமான எந்த தீர்வுகளோ அது பற்றிய அடிப்படை அறிவுகளோ அமைந்திருக்கவில்லை.

எது எவ்வாரு இருந்தாலும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை பொருத்தவரை பலத்த அனுபவங்களும் கல நிலவர அறிவுகளும் கொண்ட ஒரு முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே இன்று காணப்படுகின்றது. ஆதலால் அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும், கட்சியின் கட்டமைப்பும் அதன் கொள்கைகளும் முஸ்லிம்களுக்கான தீர்வு எது என்பதில் உடன்பட்ட கருத்தோடும் ஆக்க பூர்வமான அர்ப்பனிப்புடனும் செயற்படும் துணிவையும் திரணியையும் கொண்டிருப்பது வெளிப்படையானது.  

எதிர்வரும் பாராளுமன்றம் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை முன்னகர்த்தாது இருப்பு கொள்வதில் உள்னாடு தொட்டு வெளினாடு வரையான அழுத்தங்களை பிரயோகிக்கும் நெருக்குவாரங்கள் நம் கண் முன்னே நிழலாடிக்கொண்டிருக்கின்ரது. இந்த சந்தர்பத்தில் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவில் பிழை செய்து விடுவோமானால் இதுகாலவரை நாம் இழந்த எந்த உய்ர், பொருட்சேதங்களுக்கும் அழிவுகளுக்கும் பரிகாரம் தேடிக் கொள்ளும் நேரத்தை கடந்தவர்களாக மாறிவிடும் அபாயம் இதில் காத்துக்கொண்டு இருக்கின்றது.

இந்த இருக்கமான சூழ்நிலையில் ஆழ்ந்து சிந்தித்து நிதானித்து முஸ்லிம் மக்களாகிய நாம் முடிவெடுக்கும் கட்டாயத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றோம். இந்த விடயத்தில் அதிக கவனத்தையும் புத்தி கூர்மையையும் பயன்படுத்திக் கொள்ள் வேண்டும். அப்போதுதான் நம்மை சரியான பாதையில் பயனிக்க செய்ய வழிசமைக்கும்.

வெறுமென அபிவிருத்தி அரசியலை நோக்கியோ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளில் தனிப்பட்ட அதிருப்திகளை மையப்படுத்தியோ நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நோக்குவதும் அலசுவதும் ஆக்கபூர்வமான பயன்களை முஸ்லிம் சமூகத்துக்கு தந்துவிடாது. 

மாறாக அமையப்போகும் நாடாளுமன்றத்தின் இனப்பிரச்சினை தீர்வு, தேர்தல் முறைமை மாற்றம் என்பனவற்றில் ஆழ்ந்த பார்வையும் தெளிவையும் கொண்டிருக்கும் ஒரேயொரு முஸ்லிம் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற நம்பிக்கையும் பார்வையும்தான் நமது சமூகத்தின் எதிர்காலத்தை சரியாக தீர்மானித்து நிமிர்ந்து நடக்க உதவும் வழி என்பதை புரிந்து செயற்படவேண்டிய காலத்தின் அவசியத்தை நாம் புறமொதுக்காத பண்பு மட்டுமே நமக்கு இன்று இருக்கும் ஒரே தெரிவு என்பது ஒரு யதார்த்தபூர்வமான நிலையாகும்.

இந்த சிந்தனையின் வழி நின்று நாம் எதிர்வரும் பொதுத்தேர்தலை நோக்க வேண்டும். நமது சமூகத்தின் நீண்ட காலமாக மக்களின் செல்வாக்குகளை பெரும்பான்மையாக கொண்டு ஒரு நிலையான வாக்கு வங்கியை தளமாக கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் நாம் கைகோர்த்துக் கொண்டு பயனிப்பதே அர்த்தபுஷ்டியான செயற்பாடாகும்.

அந்தவகையில் அமையவிருக்கும் நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கானிரஸ் கட்சி சார்ந்த அதிக வேட்பாளர்களை வெல்ல செய்வதில் நமது வாக்குகள் பங்களிப்பு செய்யும் வன்னம் நாம் எம்மை தயார் படுத்த வேண்டும். உண்மையில் நமது மக்களின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காக்கும் திரானி இக்கட்சிக்கே மாத்திரமே உள்ளது.

சரியாக நமக்கான தீர்வுகளை முன்மொழியக்கூடிய ஆளுமையும் புலமையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிகம் இருக்கும். மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் நமக்கு சாதகமான போக்குகளை நிலைநிறுத்தும் காரியமாற்றும் கச்சிதமும் இக்கட்சியிடமே உள்ளது.

ஆகவே அமைய போகும் புதிய பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர்களை கூடுதலாக தெரிந்தெடுத்துக்கொள்ளும் வகையின் நமது வாக்களிப்பை நிலைநாட்டுவதன் ஊடாகவே முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வுகளும் உரிமைகளும் தனித்துவங்களும் நிலைபேறாக வேரூன்ற முடியும்.