அமானா வங்கியின் அனுசரணையில் கல்முனை நகரில் நவீன பஸ் தரிப்பிடம்!

Aslam moulana (23)_Fotor
அஸ்லம் எஸ்.மௌலானா, பி.எம்.எம்.ஏ.காதர்
கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் 2.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பஸ் தரிப்பிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
இதில் அமானா வங்கியின் பிரதித் தலைவர் குவால்டீன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, ஆசிய பவுண்டேஷன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் உட்பட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அமானா வங்கியின் அனுசரணையுடன் இந்த நவீன பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்கு அடுத்த படியாக இவ்வாறான அதி நவீன் பஸ் தரிப்பிடம் கல்முனையிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த ஐக்கிய சதுக்கத்தில் வாகனங்களில் இருந்தவாறே பயணிகள் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக Drive Through ATM ஒன்றை அமைப்பதற்கும் அமானா வங்கி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
 Aslam moulana (3)_Fotor Aslam moulana (17)_Fotor