அரசியல் அதிகாரம் வழங்குவேன் என்று அமைச்சர் ஹக்கீம் மீண்டும் வாக்குருதியளித்தார்!
அபு அலா
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசிய பட்டியல் எம்.பி.பதவியும், அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு அரசியல் அதிகாரமும் இம்முறை நிச்சயமாக வழங்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நல்லிரவு சின்னப்பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நினைவுபடுத்தி உறுதிப்பட தெரிவித்து அங்கு ஆக்ரோசமாக உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் றவூப் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கட்சியைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கு இனி கட்சியில் இடமில்லை இனி தேர்தல்களில் தகுதி தரம் மற்றும் அவரின் செல்வாக்கு போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் அத்துடன் கட்சியின் மூத்த போராளி, முன்னாள் உறுப்பினர் என்ற விடயங்கள் இனி ஒருபோதும் பார்க்கப்படமாட்டாது அதற்கு இடமும் அளிக்கப்பேவதில்லை.
பாலமுனை மு.கா.பிரமுகர்களை ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப்படுத்த வேண்டும் பாலமுனை பிரதேசத்தின் சகல அபிவிருத்திகளையும் நான் நேரடியாக பாரமெடுத்து செயற்படுத்தவுள்ளேன். நமது வேட்பாளர்கள் மூன்று பேர்களின் வெற்றிக்காக நீங்கள் பாடுபடவேண்டும்.
இத்தேர்தலில் உங்கள் தலைவர் அதாவது நான் இத்தேர்தலில் கேட்கின்றேன் என்று நீங்கள் நினைத்து மூன்று பேரின் வெற்றிக்காக வாக்களிக்க வேண்டும். சில்லறை கட்சிகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கக் கூடாது. மூன்று வேட்பாளர்களும் ஒற்றுமையாக தங்களது பிரதேசங்களை முன்னுரிமைப்படுத்தி தேர்தல் வேலைகளை செய்ய வேண்டும்,
சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களின் தேவைப்படுகளை இன்று பிரதமர் தனது உரையில் தெரிவித்தார். சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை தருவதாக வாக்களித்துள்ளார். இந்த கட்சியை விட்டு சென்றவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியும்தானே அதேபோல்தான் ஜெமீலுக்கும் ஏனையவர்களுக்கும் இதே நிலைதான் நான் சொல்லத் தேவையில்லை நீங்கள் நேரடியாக கண்டுள்ளீர்கள் என்றார்.