அஸ்ரப் ஏ சமத்
பிரபல ரகா் வீரா் தாஜுடின் ஜனாசாவை இன்று தோண்டி எடுப்பு
குடும்பத்தாா் ஊடகங்களுக்கு அதனை காட்ட வேண்டாம் என தெரிவிப்பு.
பள்ளிவாசல் முன் ஆர்பாட்டம் ஒன்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெற்றது.
இன்று விசேட வைத்திய பாரிசோதகா், கல்கிசை மஜிஸ்ரேட் நீதிபதி, மற்றும் குற்றத் தடுப்பு பொலிஸ் அத்தியட்சகா், கொண்ட குழு தெஹிவளை களுபோவில முகையதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று காலை 8.30 மணிக்கு தோண்டி எடுக்கப்பட்டது.
வசீம் குடும்பத்தினா் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கினங்கள உடலை தோன்றும்போது அதனை ஊடகங்களுக்கு காட்டுவது தவிா்த்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தனா்.
அதன் பின்னா் மையவாடி பள்ளிவாசல்கள் முற்றாக மறைக்கபட்டு பொலிசாா் பாதுகாப்பின் போடப்பட்டு அங்கு மையவாடிக்கு வெளியில் கடுப்பு நிற வாகனத்தில் அவரது எழும்புகள் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இங்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், விசேட வைத்திய அத்தியட்சகரும் இலங்கை அதற்குரிய சகல வசதிகளும் உள்ளன. அவரது உடலை அவரது சகோதரி, சகோதரா் அடையாளம் காட்டியிருந்தனா். பள்ளிவாசலின் பதிவு உள்ளது. அவா் அடக்கப்பட்ட இடம் தோட்டப்பட்டு எழும்புகள் கொண்டு ஆராய்ச்சிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது.