கொழும்பு நகரத்தில் வாழும் 75ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
கடந்தஆட்சிக் காலத்தில் கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற திட்டத்தின் கீழ் சிறிய வீடுகள் அகற்றல், மற்றும் குறைந்த வருமானம் பெரும் வருமைக்கோட்டின் கீழ் வாழ் மக்களுக்கு சகல வசதிகளும் கொண்ட வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்(NHDA) ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகார சபையின் அடுத்த ஆண்டுக்கான வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் கொழும்பு வாழ் மக்களது வீடமைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீா்வுத் திட்டமொன்றையும் வகுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர பிரதேசத்தில் குரைந்த வாடகை செலுத்துனா்கள், வீட்டுரிமைப்பத்திரம் இன்றி வாழும் குடும்பங்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சகலருக்கும் அவா்களது வீடுகளுக்கு வீட்டுரிமைப்பத்திரம் வழங்கப்பட உள்ளது.
கொழும்பு நகரில் நீண்ட காலமாக தற்காலிக வீடுகளில் கூடுதலான மத்திய தரத்தினா் வாழ்ந்து வருகின்றனா்.
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவா்களின் ஆலோசனைக்கிணங்க கொழும்பு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சகல அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட உள்ளன. கொழும்பில் ்வீடுகளற்ற மக்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுப்பட்டுள்ளன. மேற்படி ஆலோசனையை வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச சம்பந்தபபட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளாா்.
இந்த திட்டத்தில் கொழும்பு நகரில் 300 ஏக்கா் வீடமைப்பு அபிவிருத்தி செய்யப்பட்டு 173 வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படும். இதில் 20,121 வீடுகள் உள்ளடங்கும். அத்துடன் இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை சகல அடிப்படை வசதிகளையும் முன்னெடுப்பதற்கு தீர்மாணி்க்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 32 திட்டங்களில் 1756 பேருக்கு வீட்டுரிமைப்பத்திரம் வழங்குவதற்கும் நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆர். பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 போ்ச் காணி வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டன. இவ்வாறாக 108 வீடமைப்புத் தொகுதிகள் உள்ளன. இதில் 18,822 குடும்பங்கள் இதுவரை வீட்டுரிமைப் பத்திரம் இல்லாது வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்கும் வீட்டுரிமைப்பத்திரம் வழங்குவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு நகரில் அதி வேகமாக நகரை அபிவிருத்தி செய்யும் சட்டவிரேத குடியிருப்புக்களை அகற்றி அவா்களுக்கு சகல வசதிகளும் கொண்ட வீடுகள், வீட்டுரிமை பத்திரம் வழங்கி அவா்களை அப்பிரதேசத்திலேயே குடியேற்றுதல், இத்திட்டத்தினால் 20 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைய உள்ளனா்.
கடந்த ஜன் 23ஆம் திகதி தேசிய வீடமைப்பு தினத்தில் அமுலாக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பாரிய வீடமைப்புத்திட்டங்களை அமுல்படுத்தி வீடில்லாமல் அல்லல்படும் மக்களது வீட்டுப்பிரச்சினையை இந்த அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. அத்துடன் கொழும்பு நகரில் மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 75ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க உள்ளது.