பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரில் நீண்ட காலமாக நிலவி வரும் நிரந்திர அதிபர் விடயத்தை வலியுறுத்தி யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 7 .30 மணியளவில் நடைபெற்றது.
இதன் போது போராட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி தங்களிற்கான நிரந்திர அதிபர் விடயத்தை வலியுறுத்தினர்.
ஆனால் இப்போராட்டம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.காரணம் இப்போராட்டத்தை அப்பாடசாலை ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை மீள அழைத்தமையாகும்.இதனை அடுத்து ஆசிரியர் ,பெற்றோர்களிற்கிடையே முறுகல் நிலை தோன்றியது.இதன்
பின்னர் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மீண்டும் அதே கருத்துள்ள சுலோகங்களுடன் கவனயீர்ப்பினை மேற்கொண்டு நீண்ட கால அதிபர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறு கோரினர்.
தொடர்ந்து அமைதியான முறையில் கலைந்து சென்றதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் எடுக்க தவறும் பட்சத்தில் போராட்டத்தை தொடர உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி பாடசாலை அதிபர் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த பலரும் அரசியல் காழ்ப்புணர்வு தான் முக்கிய காரணம் என சுட்டிக்காட்டினர்.