றியாஸ் இஸ்மாயில்
அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் எதிர்வரும்பாராளுமன்றத் தேர்தலின் பின் அரசியல் அதிகாரம் உடனடியாக வழங்கப்படும் எனமு.கா.தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் நேற்று இரவு(06)அக்கரைப்பற்றில்நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது உறுதிப்படத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் மூன்றுவேட்பாளர்களை ஆதரித்து அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகா வித்தியாலய வீதியில்ஸ்ரீ.மு.கா.கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கலந்து கொண்டுஉரையாற்றுகையில் மேற்கண்டவாறு அவர் இங்கு தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் மாபெரும் தேர்தல் பரப்புரைக்கூட்டம் கிழக்கு மாகாண சபைஉறுப்பினரும்,அக்கரைப்பற்று தேர்தல் குழுத் தலைவரும்,முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருமான ஏ.எல்.தவம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஷாம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உாரையாற்றுகையில்,
மஹிந்த ராஜபக்ஸவின் பலுானில் உள்ள காற்றை மெது மெதுவாக நமது ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன திறந்து வருகின்றார் எதிர் வரும் 17 ஆம் திகதியின் பின் அம்பாறை மாவட்டத்தில் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லா ஆகியோர்களின் பலுான்களில் உள்ள காற்று முற்றாக வெளியேறி விடும்
கடந்த 8 ஆம் திகதி இந்நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நல்லாட்சிக்கான சுதந்திரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர் வரும் 17 ஆம் திகதி பாதுகாக்வேண்டும் இதற்கு அக்கரைப்பற்று மக்கள் பிரதேச வாதம் பாராது முஸ்லிம் சமூகத்திற்காக வேண்டி பூரண ஒத்துழைப்புடன் ஆதரவு வழங்கவேண்டும்.
இம் மாவட்டத்தில் எமது கட்சி சார்பாக போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வேற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று திரண்டு உழைக்க வேண்டும்.
அக்கரைப்பற்றில் யார் வென்றாலும் யார் தோல்வியடைந்தாலும் பிரச்சினை இல்லை மு.கா.வின் தலைமைத்துவம் கூறியதற்கமைவாக அதிகாரம் வழங்கப்படுவதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என ரவூப் ஹக்கீம் மேலும் இங்கு உரையாற்றினார்.
வேட்பாளர்களான பைசல் காசீம்,எச்.எம்.எம்.ஹரீஸ்,கட்சியின் செயலாளரும் சுகாதாரஇராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி,கிழக்கு மாகாண சபைஉறுப்பினரும்,அட்டாளைச்சேனை தேர்தல் குழுவின் தலைவருமானஏ.எல்.எம்.நஸீர்,கல்முனை மாநகர சபையின் மேயர் நிஸாம் காரியப்பர்,பிரதிமேயர்ஏ.எல்.மஜீத்,மு.கா உயர்பீட உறுப்பினர்களான யூ.எம்.வாஹிட்,எஸ்.எல்.எம்.பழீல்(BA),ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்,முன்னாள் தவிசாளர்எம்.ஏ.அன்சில்,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர்,முன்னாள் பிரதேச சபைஉறுப்பினா்களான எம்.எல்.கலீல்,தமீம் ஆப்தீன் என பல அரசியல் பிரமுகா்கள் மற்றும்முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.