தேசிய நூலகத்தின் 25ஆவது ஆண்டு விழா நாளை ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்படவுள்ளது !

SAMSUNG DIGITAL CAMERA

அஸ்ரப் ஏ சமத்
இலங்கை தேசிய நூலகத்தின் 25ஆவுது ஆண்டு விழா நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின்  தலைமையில் கீழ் கொழும்பு தாஜ் சமுத்திராவில் பிரதான வைபவம் நடைபெற உள்ளது.
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் நடைபெற்ற  ஊடகவியலாளார் மாநாட்டிலேயே மேற்கண்ட தகவல்களைத் பணிப்பாளார் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் –
10_Fotor
தேசிய நூலகத்தின் 25 வருடங்கள் நிறைவு  முன்னிட்டு 2015 ஆகஸ்ட் 05ஆம் திகதி பி.பகல் 02.00 மணிக்கு பிரதான வைபவம் நடைபெறுகின்றது.  இவ் வைபவத்தில் சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை பிரநிதித்துவம் படுத்தும் வகையில்  அவற்றின் தூதுர்வகள் தேசிய நூலக பணிப்பாளார்கள் மற்றும் சர்வதேச  நூலக சங்கம் ம ற்றும் நிறுவனங்களின் ஆசிய வலய பிரநிதிகளும் சிரேஸ்ட  நூலகர்களும் மற்றும் எழுத்தாளார்கள் உள்ளீட்ட பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள  உள்ளதா நூலகஆவனாக்கள்  சேவைகளின் தலைவர்  பேராசிரியர் ஒலிவ் அபேநாயக்க தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் தேசிய டிஜிட்டல் நூலக இனையப் பக்கமும் திறந்து வைக்கப்படும்.  ஜ.சி.ரி.ஏ நிறுவனத்தின் பணிப்பாளர்  திரு முகுந்தன் கனகை அவர்களால் பேருரை நிகழ்த்தப்படும்.
இலங்கை தேசிய நூலகத்திற்கு 25 வருடங்கள் முன்னிட்டு முத்திரை வெளியிடல், சர்வதேச நூலக சங்கம் மற்றும் நிறுவனஙகளின் வலய பேணல் மத்திய  நிலையமொன்றின்னை கைச்சாத்திடும் நிகழ்வும் இடம்பெறும். 
அத்துடன் ஆகஸ்ட் 06ஆம் திகதி மு.பகல் 09.00 பி.ப 05.00 மணிவரை வெள்ளவத்தை க்லோபல் டவர் ஹோட்டலில் பிரதான முன்று அமர்வுகளைக் கொண்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச புத்திஜீவிகள் ஆய்வறிக்கைகளை உள்ளடக்கிய சர்வேதேச நூலக மாநாடு ஒன்றும் இடம்பெற உள்ளது.  மத நிகழ்வுகளும் இடம்பெறஉள்ளதாக நூலக சபையின் தலைவர் தெரிவித்தார்.