அறிவிவை அடிப்படையாகக் கொண்ட போட்டிமிக்க சமுக சந்தைப் பொருளாதார முறை ஒன்றின் முலம் உலக சந்தையை வென்று சூழலினையும் பாதுகாத்துக் கொள்வதுடன் அரசியல் சமுக. மற்றும் பொருளாதார சமத்துவத்தினைக் கொண்ட நல்லாட்சி ஒன்றினை உருவாக்கி இந்த இலக்கினை வெல்லமுடியும் என ஹர்சா டி சில்வா பம்பலப்பிட்டியில் உரையாற்றினார்.
சர்வதேச கீர்த்தியை பெற்ற பொருளாதாரத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றவரும் பொருளாதார திட்டமிடல் பிரதியமைச்சரும் கொழும்பு மாவட்டத்தில் ஜ.தே.கட்சியில் போட்டியிடுபவருமான கலாநிதி ஹர்சா டி சில்வா பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
சர்வதேச கீர்த்தியைக் கொண்ட கலாநிதி ஹர்ச அமேரிக்கா பல்கலைக்கழகத்தின் கலாநிதி பட்டம் பெற்றவர். கொழும்பு ரேயல் கல்லூரியின் பழைய மாணவர்.