அவை நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை 9.30 வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அவைக்குள் இன்னும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர், பகல்போசனத்துக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் பகல்போசனத்தை முடித்துகொண்டு திரும்பியதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமையை எதிர்த்தும் அவ்வழைப்பை இரத்துசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளிக்கவேண்டும் என்று கோரியே எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.