ரணில் – சோபித்த தேரருக்குமான ஒப்பந்தம் !

அஸ்ரப் ஏ சமத்

110 சிவில் சமுக அமைப்புக்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தர்தலில் சிறந்த ஆட்சியை ஏற்படுத்தும் முகமாக பிரதமரும் ஜ.தே.கட்சித் தலைவருமான ரணில்விக்கிரமசிங்கவும். மாதுலாவே சோபித்த தேரவுக்குமான ஒர் ஒப்பந்தம் இன்று நடைபெற்றது. 

இந் நிகழ்வு  இலங்கை மன்றக் கல்லுயில் நடைபெற்றது. இந்த நாட்டில் உள்ள புரவசிய புரமுன தமிழ் முஸ்லீம் சிங்கள கிருஸ்த்தவ சமுக அமைப்புக்களுடன்  75 க்கும்  மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரநிதிகள் இங்கு சமுகம் தந்திருந்தனர்.
கடந்த ஜனாதிபதித்  தோர்தல் போன்று எதிர்வரும் பாரளுமன்றத் தர்தலின் பின்னர்  சிறந்த ஆட்சி, சுயாதீன கமிசன், தோர்தல் விதி முறை மாற்றம்,  மக்கள் சொத்து அரச சொத்துக்கள் பாதுகாக்கப்படல், ஏற்கனவே அமுலாக்கப்பட்ட 19வது சீர்திருத்தம் அரசியலமைப்புச் சபை நிறுவி அதனை அமுலாக்கல்,  பாராளுமன்ற  அரசியல் வாதிகள் நிதி மோசடி, துஸ்பிரேயோகம், பழிவாங்கள், நாட்டுக்குத் துரோகம் இழைப்பவர்களை தண்டித்தல் அவரின் அரசியல் உறுப்பில் இருந்து அகற்றுதல்  பொலிஸ், தோர்தல், நீதி, சட்டம், ஊடக, போன்ற பல கொமிசன்களுக்கு சுயாதீனமாக இயங்கவைத்தல் போன்ற பல்வேறு வேண்டுகோள் இவ் ஒப்பந்தத்தில் உள்ளதாக மாதுலுவாகத் சோபித்த தேரர் உரையற்றினார். 
27_Fotor 29_Fotor 22_Fotor