“முஸ்லிம்களின் அரசியல் சீர் கேடுகள்”

வை.எம்.பைரூஸ் 

எதிர் வரும் மாதம் பதினேழாம்  திகதி நடை பெற விருக்கும் பொதுத் தேர்தலைப் பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள் இப்பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று நாடாவிய ரீதியில் ஆங்காங்கே கூட்டங்களும் கச்சேரிகளும்  நடந்த வண்ணம் இருக்கின்றது

இந்த தேர்தலானது முஸ்லிம் மக்களிடத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் ஆய்வாளார்கள் கருதுகிறார்கள் அரசியல் ஒரு புரம் இருக்க இன்று அரசியலுக்காக சிலர் மார்க்கத்தை மறந்து செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கவலை முஸ்லிம்கள் மத்தியிலயே இன்று அளவுக்கிகமான அரசியல் கட்சிகள் இருப்பதால் இன்று போட்டி முஸ்லிம்களுக்குள் மத்தியில் தான் பெரும் சவாலாக அமைய விருக்கின்றது போல் விளங்குகிறது ஒரு தனிப்பட்ட அரசியல் தலைவனுக்காக நாம் எமது மார்க்கததை விற்க வேண்டுமா…? நிச்சயமாக இல்லை ஆனால் இன்று எமது சகோதர முஸ்லிம்கள் சிலர் கட்சிக்காக தான் தலைவனுக்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும் எனபதற்காக சில ஊடகங்களிலும் முக நூல்களிலும் நடக்காத செய்திகளையும் நடந்தது போன்று இட்டுக் கட்டி வதந்திகளை பரப்பிக் கொண்டு சமூகத்தை சீர் குழப்பிக் கொண்டிருப்பதை கண்கூடாகவும் ஊடகங்கள் ஊடாகவும்  எம்மால் காண முடிகிறது

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஜனநாயக நாடு எம் நாட்டில் இன மத பேத மின்றி அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் வாக்குறிமை உண்டு என்பதை நாம் அறிவோம் பெரும் பான்மையாக பௌதர்கள் வாழும் எம் நாட்டில் இஸ்லாத்தை மையப்படுத்தி ஆட்சி அமைக்கவோ அல்லது இஸ்லாத்தை வைத்து நீதி வழங்குவதோ நடை முறைக்கு சாத்தியமில்லாத ஒன்றே எமது மார்க்கமும் அதை வலியுருத்தி சொல்லியிருக்கிறது

தனிப்பட்ட ஒரு மனிதனை மாத்திரம்  காப்பாத்து வதற்காக பிறரை சாடி அரசியல் செய்ய எந்த ஒரு மதமும் விரும்ப வில்லை இஸ்லாமும் அதனை வண்மையாக கண்டிக்கிறது ஆனால் சில அடிவருடி அரசியல் வாதிகள் தனது தொண்டர்களை பிற அரசியல் தலைவர்களின் தொண்டர்கள் தாக்குவதும் அவர்களுடைய சொத்துக்களுக்கு இடையூரு செய்வதும் இதுவே இன்று சிலருக்கு தொழிலாக போய்க் கொண்டிருக்கிறது

எமது புனித மார்க்கமான இஸ்லாம் ஒரு தனி மனிதனுக்காக போராடுவதையோ அதற்காக உயிரழப்பதையோ வன்மையாக கண்டிருக்கிறது அது மட்டு மன்றி எங்களுடைய உயிருக்கும் மேலான நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது இறுதிப் பேருரையில் என்ன கூறினார்கள் என்று ஞாபகம் இருக்கிறதா…? அறபா மைதனத்தில் நின்று கொண்டு இந்த நாள் எவ்வளவு கண்ணிய மிக்கதோ இந்த புனித மிகு கஃபா எவ்வளவு புனித மானதோ அதை விட ஒரு முஸ்லிமீன் தன் மானம் கௌரவம்  அவனுடைய உடமைகள் எல்லாவற்றையும் விட மகத்தானது என்று சொன்னார்கள் என்றால்  பிறருடைய தன்மான விடயத்தில் நாம் எவ்வாறு கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டும் என்று சிந்நியுங்கள் சகோதரர்களே……?

நிச்சயமாக ஒரு உண்மையான முஸ்லிம் பிறரை கேலி செய்பவனாகவே பிறருடை மானத்தில் விளையாடுபவனாகவே இருக்க மாட்டான் என்பதே இதலிருந்து புலப்படுகிறது தவறு செய்யாதவர்கள் மனிதர்கள் அல்ல தவறு செய்யாத மனிதர்கள் மாத்திரமே இந்த உலகத்தில் வாழ்வார்களேயானால் இந்த உலகத்தை அல்லாஹ் அழித்து விடுவான் இதுதான் எதார்த்தம் சகோதரர்களே தவறு செய்தால் அல்லாஹ்விடத்தில் அழுது புரண்டு தவ்பா செய்து மீள வேண்டும் இது தான் உண்மையான முஸ்லீமின் அடையாளம் ஆனால் அதன் பிற்பாடு அந்த பாவத்தை ஏறேடுத்தும் பார்க்க கூடாது இதுதான் பாவத்திலிருந்தும் அநியாயத்திருந்தும் மீள்வதற்கான இலகுவான வழி

இன்று சில முஸ்லிம் அரசியல் வாதிகள்  தன்னிடம் ஆள் பலம் அதிகார பலம் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஆணவத்துடனும்  தலைக்கணத்துடனும் பிரரை சாடி அடவடித்தன  அரசியல் செய்து வருகிறார்கள் இது உண்மையில் இஸ்லாம் காட்டிய அரசியலா…?  உண்மையில் இதுவெல்லாம் இஸ்லாத்தை ஒழுங்கான முறையில் இவர்கள் விளங்காததன் விளைவே என்று சொல்லிக் கொள்வதிலும் மிகையில்லை

வாக்குறிமை என்பது ஒரு தனி மனிதனின் சுதந்திரம் அதில் யாரும் தலையிட முடியாது பணத்தை கொடுத்து வாக்குறிமையை பறித்தாலும்   அதுவும் இஸ்லாத்துக்கு முரணானதே தனது சுய லாபத்துக்காக கூட இந்த வாக்கை அநியாய மாக்க முடியாது என்றால் எந்த அளவுக்கு இஸ்லாம்  ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தை தெளிவு படுத்தி இருக்கின்றது என்று சிந்தியுங்கள்

இம்மைக்கும் மறுமைக்கும் உண்மையான வெற்றியைத் தரக் கூடிய மார்க்கத்தில் இருந்து கொண்டு பிற மதத்தவர்களுக்கு  முன் மாதிரியாக வாழக் கூடிய நாம் எமக்குள்ளேயே அரசியல் ரீதியாக பிரிவினைகளை உண்டு பண்ணிக் கொண்டு சில அடி வருடி அரசியல் வாதிகளுகளின் சுய நலத்துக்காக தன்னையும் மாய்த்துக் கொண்டு பிறரையும் பகைத்துக் கொண்டு பிற மதத்தவர்களிடத்திலும் இஸ்லாத்தை பற்றி தப்பபிப்பிராயத்தை உண்டு பன்னி வாழ்ந்தால் நிச்சயம் அல்லாஹ் வின் சாபம் எம் மீது வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது…