நான் செய்த தவறுகளில் ஒன்று..! வாய்திறந்தார் பைசால் காசிம் !

சுலைமான் றாபி
இவ்வுரையின் சில முக்கிய குறிப்புக்கள் ; 
 
#) அம்பாறையில் ஐ.தே. கட்சி வெல்லும் !
#) சாராயக் கலாச்சாராம் இலாத அரசியல்!
#) வன்முறை செய்வோர் மீது வன்முறை செய்ய தயங்கப் போவதில்லை
#) நீதியான தேர்தல் ஒன்றின் மூலம் மக்கள் வாக்களிக்க சந்தர்ப்பம்
#) தெஹியத்தக் கண்டி போன்ற பிரதேசங்களில் மு.கா விற்கு மக்கள் ஆதரவு 
#) அம்பாறையில் 03 முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெறுவதே இலக்கு
#) இந்த தேர்தலில் தயா கமகே போன்றோர்கள் தெரிவு செய்யப்படக்கூடாது.
#) அதாஉல்லா, ரிஷாத் பதியுத்தீன் ஆகியோர்கள் சமூகத்தினை காட்டிக் கொடுத்தனர்.
#) இலங்கை போக்குவரத்துச் சபையில் 450 நியமனங்கள் வழங்கியுள்ளேன்.
#) நிந்தவூரில் இருந்து ஒரு கூட்டம் எனக்கு செல்வாக்கில்லை என்ற செய்தியை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். 
#) கண்ணை மூடிக்கொண்டு தூங்கியெழும் MP யாக இருக்க விரும்பவில்லை
 
முழுமையாக வாசிக்க...
நான் செய்த தவறுகளில் ஒன்று என்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளை அவ்வப்போது மக்களுக்கு தெரியப்படுத்தாமல் விட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் வேட்பாளருமான  பைசால் காசிம் நேற்று (27) நிந்தவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார். 
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் :
11183436_993185750714183_8150022057192471288_n
நாம் இந்த தேர்தலினை அமைதியான முறையில் நடாத்த விரும்புகிறோம். இதனை மீறி வன்முறை செய்வோர் மீது வன்முறை செய்வதற்கும்  தாங்கள் தயங்கப் போவதில்லை. இந்த தேர்தலில் சாராய கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து ஒரு நீதியானம் தேர்தல் ஒன்றின் மூலமாக மக்கள் வாக்களிக்க சிறந்த சந்தர்ப்பங்களினை ஏற்படுத்திக் கொடுப்போம். இம்முறை இடம்பெறும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தினை ஐ.தே.கட்சி வென்றெடுக்கும். 
இதற்காக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று பல பிரச்சாரங்களினை செய்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக தெஹியத்தக் கண்டியில் எமக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருகின்றது. அம்பாரைத் தொகுதியில் மு.கா வின் வேட்பாளர்கள் 15,000 தற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார்கள்.  என்ற நம்பிக்கைகள் எமக்கிருக்கின்றது. 
இந்த தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக 04 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதில் 03 முஸ்லிம் உறுப்பினர்களைப் பெறவேண்டும் என்பதே எமது இலக்காகும். எமது வெற்றி நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் தயா கமகே போன்றோர்கள் தெரிவு செய்யப்படக்கூடாது என்பதே எமது போராட்டமாகும். 
மறைந்த தலைவரின் காலத்தில் ஐ.தே.கட்சிக்கு 03 பெரும்பான்மை இனத்தவர்களை பாராளுமன்றப் பிரதிநிதிகளை அன்று எமது வாக்குகள் மூலமாக தெரிவு செய்தோம். அதில் முஸ்லிம்கள் சார்பாக மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மாத்திரமே பாராளுமன்றம் சென்றிருந்தார். அதுபோன்றதொரு தவறை இனிமேல் நாம் ஒருபோதும் செய்யக் கூடாது
ஒரு நேரத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றே முடிவு செய்திருந்தேன். ஆனால் எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும், ஊரிற்கு ஒரு  பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். கண்ணை மூடிக்கொண்டு தூங்கியெழும் MP யாக இருக்க விரும்பவில்லை. மயில் போன்ற கட்சிகளின் சதித்திட்டங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள மாற்றுமொரு தேர்தலின் போது கண்டு கொள்ளலாம்.
மக்களினால் தனக்கு வழங்கப்பட்ட இப்பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலம் தன்னால் முடியுமான பல சேவைகளை மக்களுக்கு செய்து கொடுத்துள்ளேன். நிந்தவூரில் இருந்து ஒரு கூட்டம் தனக்கு செல்வாக்கில்லை என்ற செய்தியை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. கடந்த காலங்களில் ஒரு அமைச்சரினால் செய்ய முடியாத பலசேவைகளைச் செய்து இலங்கை போக்குவரத்துச் சபையில் 450 நியமனங்கள் எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி வழங்கியுள்ளேன்.
20 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியுமென்றால் 10  பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு இந்த ஆட்சியில் ஒரு பேரம் பேசும் சக்தியாக ஏன் மாறக் கூடாது? 
கடந்த மகிந்தவின் ஆட்சியின் போது அமைச்சர்களான ரிஷாத் பதியுத்தீன், அதாஉல்லா போன்றோர்கள் இந்த சமூகத்தினை காட்டிக் கொடுத்தவர்கள். ஆகவேதான் மு.கா வின் கைகளைகளை பலப்படுத்துவதன் மூலம்தான் எமக்குண்டான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். வரும் ஐ.தே.கட்சியின் ஆட்சில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ்  பேரம் பேசும் சக்தியாக கொடிகட்டிப் பறக்கப் போகின்றது என்று குறிப்பிட்டார்.