ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி வெளியேற்றப்பட்டது .
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி செயற்பட்டு வந்தது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டமைப்பு விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியை பங்காளிக் கட்சியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.