ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவிக்கையில்..
தேர்தல் நடவடிக்கை குழுவின் தலைவர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஸ வழிநடத்தும் தேர்தல் செயற்பாட்டிற்கான எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளோம். குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கு ஏற்ற பல யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது