அமைச்சர் ரிஷாட் மற்றும் ஜெமில் அகியோர் மு.காவுக்கு துரோம் செய்தவர்களே !

 

anzil

அபு அலா 

அமைச்சர் ரிஷாட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமில் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், தலைமைத்துவத்தையும் பற்றி விமர்சிக்க வரக்கூடாது அப்படி விமர்சிப்பதாகயிருந்தால் அவர்கள் எந்த குற்றமும் செய்யாத சுத்தவாளியாக இருக்கவேண்டும் என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமாகிய எ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதான வீதி தபாற்கந்தோர் அருகாமையில் இன்று இரவு (27) திங்கட்கிழமை மு.காவின் சார்பில் ஜக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் 3 வேட்பாளர்களையும் ஆதரித்து இடம்பெற்ற மாபெரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கூட்டத்தில் அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமில் நீதி, நேர்மையைப் பற்றி இங்கு கதைக்க வரக்கூடாது அவர் பல கோடி ரூபாய்க்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு விலை போனவர்தான். அவர் கட்சி விசவாசி என்றால் பணத்துக்கு விலைபோயிருப்பாரா? அல்லது பதவி பட்டத்துக்காக தலைமையுடன் சண்டையிட்டு முரண்பட்டு மு.காவுக்கு வாக்களித்த பொதுமக்களை குழப்பியிருப்பாரா? இப்படியானர்கள் எப்படி வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யப்போகின்றார்கள்.

அவர்கள் மு.காவில் இவ்வளவு காலமும் இருந்து வந்தது பதவி பட்டங்களை பெறவேண்டும் என்ற நோக்கமே தவிர வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கமே அவர்களுக்கு இருக்கவில்லை.

அமைச்சர் ரிஷாட் என்பவர் ஒரு ஹோட்டலில் வில் மேக்கராக இருந்தவர்தான் இவரும் கட்சிக்கு பல துரோகங்களை செய்துவிட்டுத்தான் கட்சியைவிட்டு ஓடிப்போனவர். இவர்கள் இருவரும் பதவி ஆசையில்தான் கட்சியின் தலைமைக்கும், கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள். தற்போது ஜெமில் மாகாண சபை உறுப்பினர் என்ற பதவியை வைத்திருப்பதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடையதுதான் என்பதை அவர் மறக்கக்கூடாது என்பதையும் இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இவர்கள் இருவரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பற்றி கதைக்க எந்த அருகதையும் இல்லை என்றார்.