முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது !

Unknown

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இவ்வாறு எதிர்பை வெளியிட்டுள்ளன.
ஹெல்பிக் ஹம்பாந்தோட்டை வழக்கில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு சார்பாக தீர்ப்பளித்தமையை இட்டு வருந்துவதாக சரத் என் சில்வா கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது அந்த கூற்றுக்களை அவர் மறுத்து வருகின்றார்.
முன்னாள் பிரதம நீதியரசர் என் சில்வாவின் நடவடிக்கைகள் நீதிமன்றின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில் மஹிந்தவிற்கு உதவிகளை வழங்கியமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது அவ்வாறான எவ்வித கூற்றையும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெளியிடவில்லை என சரத் என் சில்வா கூறி வருவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.