ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் விவசாயத்துறையை சீரழித்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடக்த காலங்களில் விவசாயத்தை அழித்த ஐக்கிய சேதியக் கட்சி ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் மீளவும் விவசாயத்துறையை அழித்துவிடும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாத்தளை நாவுலவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உர மானியம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் பதவி வகித்த காலத்தில் விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்னுரிமை அளிக்காது எனவும், வயல் நிலங்கள் வேறும் தேவைகளுக்காக பயன்படுத்தப்படக் கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் நாட்டின் விவசாயத்துறை பாரியளவில் பின்னடைவுகளை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். விவசாயத்துறையின் பிரச்சினைகளை ஐக்கிய தேசியக் கட்சி மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.