இலங்கையில் கப்பல்களும் கார்களும் உற்பத்தி செய்யப்படும் : பிரதமர் !

Ranil-Wickramasinghe.jpg.image.784.410
இலங்கையில் கப்பல்களும் கார்களும் உற்பத்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வாறு கார் மற்றும் கப்பல் உற்பத்திகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் கப்பல் உற்பத்தி நிறுவனமொன்றை அமைப்பதாக சீன நிறுவனமொன்று உறுதிமொழி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் வொக்ஸ்வோகன் கார் நிறுவனம் உற்பத்திகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் அனல் மின் நிலையமொன்று அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகள் இன்று நாட்டில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டப் பகுதி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு விஞ்ஞான பிரிவை உடைய உயர்தரப் பாடசாலைகள் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா விசேட சுற்றுலா மையமாக மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.