இம்முறை பொதுத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கான 62,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் ஐந்து இலட்சத்து 66,823 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகும்.
இந்த விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.