பொது பல சேனாஅமைப்பும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலும்!

imageசுல்பிகார்

பொது பல சேனாஅமைப்பும் எதிர்வரும் பாராளமன்ற தேர்தலும் கடும் போக்கு பௌத்த தீவிர வாத அமைப்பான பொது பல சேனா தன்னை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து நாக பாம்பை கட்சியின் சின்ன மாக பெற்று உள்ளது .அத்துடன் எதிர் வரு பொது தேர்தலில் நாடு முழுவதும் போட்டி இடுவதாகவும் அறிவித்துள்ளது இதனால் எதிர் வரும் பாராள மன்ற தேர்தல் எந்த ஒரு அரசியல் கட்சி யை விடவும் பொது பல சேனா அமைப்புக்கு மிக முக்கியமானதாக அமயைபோகிறது. ஏனெனில் அவ்வமைப்பு கடந்த காலம் சிறு பான்மை மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்த செயற்பாடுகளுக்கு சிங்கள பௌத்த மக்கள் அதனை எவ்வாறு எடுத்துக்கொண்டார்கள், அதக்கு அவர்களின் அங்கிகாரம் என்ன ,அவர்கள் இட்ட புள்ளி என்ன என்பதை அறிய ஒரு களமாக இத்தேர்தல் நோக்கப்படுகிறது. 2012 ம் ஆண்டு கொழும்பு நாவலை பிரேதேசத்தில் ஒரு வீட்டில் இருந்த வாறு கிருஸ்தவ மத போதகர் ஒருவர் பௌதர்களை மதம் மாற்றுகிறார் என்ற கோசத்துடன் கிருஸ்த்தவ மத குருவையும் அவர் தங்கி இருந்த வீட்டையும் தாக்குவதன் ஊடாக தமது அமைப்பை அடையாள படுத்த ஆரம்பித்தனர். கடும் போக்கு பௌத்த தீவிர வாத அமைப்பான பொது பல சேனா தன்னை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து நாக பாம்பை கட்சியின் சின்ன மாக பெற்று உள்ளது .அத்துடன் எதிர் வரு பொது தேர்தலில் நாடு முழுவதும் போட்டி இடுவதாகவும் அறிவித்துள்ளது இதனால் எதிர் வரும் பாராள மன்ற தேர்தல் எந்த ஒரு அரசியல் கட்சி யை விடவும் பொது பல சேனா அமைப்புக்கு மிக முக்கியமானதாக அமயைபோகிறது. ஏனெனில் அவ்வமைப்பு கடந்த காலம் சிறு பான்மை மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்த செயற்பாடுகளுக்கு சிங்கள பௌத்த மக்கள் அதனை எவ்வாறு எடுத்துக்கொண்டார்கள், அதக்கு அவர்களின் அங்கிகாரம் என்ன ,அவர்கள் இட்ட புள்ளி என்ன என்பதை அறிய ஒரு களமாக இத்தேர்தல் நோக்கப்படுகிறது. 2012 ம் ஆண்டு கொழும்பு நாவலை பிரேதேசத்தில் ஒரு வீட்டில் இருந்த வாறு கிருஸ்தவ மத போதகர் ஒருவர் பௌதர்களை மதம் மாற்றுகிறார் என்ற கோசத்துடன் கிருஸ்த்தவ மத குருவையும் அவர் தங்கி இருந்த வீட்டையும் தாக்குவதன் ஊடாக தமது அமைப்பை அடையாள படுத்த ஆரம்பித்தனர்.

இந்த நிகழ்வு நடந்து சில மாதங்களின் பின் தம்புள்ளை ரங்கிரி விகாரையின் விகாராதிபதி தம்புள்ளை புனித பூமியில் தம்புள்ளை பள்ளி பாசல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோசத்துடன் போராட்டத்தை ஆரம்பித்தவுடன் பொது பலசேனா அமைப்பு அப்போராட்டதுடன் தன்னை இணைத்து கொண்டு பள்ளி வாசல் அகற்றப்படவேண்டும் என்ற கோசத்தை உரக்க உரைத்து கொண்டு இருந்தது.

மேலும் ஜம்மியத்துல் உலமா சபையால் வழங்கப்படும் ஹலால் சான்றுதல் மற்றும் ஹலால் உணவு என்பன இலங்கையில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோசத்துடன் மற்றுமொரு போராட்டத்தை ஆரம்பித்தது. இப்போராட்டதிக்கு ஜாதிக கெல உறுமய கட்சியும் அதன் தலைவர் சம்பிக்க ரணவக்கையும் முழு ஆதரவை தெருவித்து கருத்தரங்குகளை நடத்தி வந்தனர்.
மேலும் இக்கால பகுதியில் பொது பல சேனா அமைப்பின் அலுவலகம் ஒன்றை முன்னாள் பாது காப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்ததை தொடர்ந்து அவ்வமைப்புக்கு அரச உயர் மட்டத்தின் அங்கீகாரமும் பதுகாப்பும் உறுதிப்படுத்தபடுகிறது .

இச்சந்தர்ப்பத்தில் அவர்களின் ஹலால் போராட்டம் வெற்றி பெறுகிறது ,இதனை தொடர்ந்து முஸ்லிம் வியாபாரிகளையும் முஸ்லிம் வியாபாரதலங்களையும் பொது பலசேனா இலக்கு வைத்து திட்டமிட்ட தாக்குதலை பல பிரதேசங்களில் அரங்கேற்றம் செய்ய தொடங்கியது .

வன்முறை நோக்குடன் பொது பல சேனா அமைப்பு எம்பிளிபிட்டி நகரில் நடை பாதை வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த முஸ்லிம் வியாபாரியை தாக்கிய போதும் முஸ்லிம் சமூகம் அமைதியாக இருந்தது. இதனால் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றியது இரத்தின புரி நகரில் முஸ்லிம் வியாபாரி ஒருவர் சிறு வயது உடைய பிக்கு மாணவனுக்கு கையடக்க தொலை பேசியில் பாலியல் படங்களை காட்டியாதாக கூறி வன்முறையை தூண்டிய போதும் பொலிசார் குறித்த வியாபரியை கைது செய்ததுடன் அப்பிரச்சினை உடன் முடிவுக்கு வந்தது.
மேலும் வன்முறை நோக்குடன் பதுளை ,நுககொட அளுத்கமை போன்ற இடங்களில் முஸ்லிம் வியாபார தளங்கள் மீது பாலியலை ஆயுதமாக பயன்படுத்தி வன்முறையை தூண்ட எத்தனித்த போதும் அந்த நிறுவனக்களில் பொருத்த பட்டு இருந்த இரகசிய வீடியோ கமராக்களின் காட்சி அவர்களின் முயற்சிக்கு தடையாக அமைந்தது.

இதனால் நீண்ட திட்டமிட்ட ஒழுங்கு படுத்தப்பட்ட ,முஸ்லிம் சமூகம் பொறுமை இழக்க கூடிய வேலை திட்டங்களை வகுத்து கொண்டு இருந்த சந்தர்பத்தில் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக அழுத்கமையில் இரண்டு முஸ்லிம் சிங்கள வாகன சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டையை முஸ்லிம் நபர் ஒருவர் பௌத்த பிக்குவை தாக்கியதாக கதை சோடிக்கப்பட்டு காட்டு தீயைப்போல் களுத்துறை மாவட்டம் முழுவதும் பரவி விடப்படுகிறது. ஒரு சிறு துரும்பு ஏனும் கிடைக்குமா என எதிர் பார்த்துக்கொண்டு இருந்த பொது பல சேனா பெரிய இரும்பு கிடைத்தவுடன் களத்தில் இறங்குகிறது.

உண்மை நிலையை அறிந்த பொலிசார் உரிய முஸ்லிம் சாரதியையும் அவரது நண்பரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து இருக்கும் சந்தர்பத்தில் பொது பல சேனா தலைமையில் நூற்றுகணக்கான வன்முறை கும்பலால் அழுத்கமை பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு குறித்த முஸ்லிம் சாரதியும் அவரது முஸ்லிம் நண்பரும் தாக்கப்படுகின்றனர். இது அப்பிரதேச அரசியல் வாதிகளின் தலையீட்டுடன் ஒரு சுமுக நிலைக்கு கொண்டு வரப்படுகிறது .

இந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்களின் பின்னர் பொது பல சேனா நீண்ட காலம் திட்டம் இட்ட தனது நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறது. நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கடும் போக்குவாத சிங்கள மக்களை ஓன்று திரட்டி இராணுவ பொலிஸ் பாது காப்புடன் அழுத்கமை நகரில் பொது கூட்டம் ஒன்றை நடத்தி அவர்களின் உணர்சிகளையும் கோபத்தினையும் முஸ்லிம் சமூகத்திக்கு எதிராக தூண்டி மூளை சலவை செய்து அதன் உச்ச கட்டடத்தில் முஸ்லிம் கிராமமான தர்கா டவுன் ஊடாக ஊர்வலமாக முஸ்லிம் எதிர் கோசத்துடன் சென்று கூட்டத்தை முடிப்பதென அறிவிக்க படுகிறது.

ஊர்வலம் பெரும் உணர்வுடன் கூடிய ஆக்ரோசமாக தர்கா நகரை அண்மித்த போது முஸ்லிம்களுக்கு எதிராக பயிட்டபற்ற காடையர்களால் வன்முறை தூண்டப்பட்டு கொலை வெறித்தாக்குதல் அரங்கேற்றம் செய்யப்பட்டு நேர சூசிக்கு ஏற்ப முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த வன்முறை நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களையும் ஏனைய சிறுபான்மை மக்களையும் ஆத்திர பட வைத்த போதும் முஸ்லிம் சமூகம் மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடன் வன்முறைக்கு எதிராக தமது நடவடிக்கைகளை மேற்கொண்டமை சிங்க மக்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான எதிர் அலையை வன்முறையாளர்களுக்கு எதிர்ராக கொண்டு வந்தது.இவன்முறை சம்பவத்தின் பிரதான சூத்திர தாரிகளை முஸ்லிம் சமூகமும் ஏனைய சிறுபான்மை சமூகங்களும் தெளிவாக அடையலாம் கண்டு ஜனநாயகத்தினூடாக பழிதீர்க்க பொறுமையுடன் காத்து இருந்தனர்.

சிறுபான்மை சமூகத்தின் பொறுமை வீண் போக வில்லை .அவர்கள் எதிர்பார்த்து இருந்த சந்தர்ப்பம் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புடன் அவர்களின் காலடியில் வந்து தவம் கிடந்தது.

சிறுபான்மை மக்ககளால் ஜனாதிபதி தேர்தலில் ஜன நாயகத்தின் ஊடாக வன்முறை குழுவை போசித்து பாது காத்த அக்குடும்பம் அரச சிம்மாசனம் இழந்து நடு வீதிக்கு வந்ததை தொடர்ந்து அமைதியான பொது பல சேனா அமைப்பு சில வாரங்களாக தமது புத்தியை காட்ட தொடங்கி உள்ளது .
தமிழர்களுக்கு எதிராக கொழும்பு வெள்ளவத்தை யாழ்ப்பாணம் அல்ல என்றும் நாம் நினைத்தால் வெள்ளவத்தையில் இருந்து யாழ்பாணம் வரை அரச மரம் நாட்டுவோம் என்ற கோசத்துடன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான வங்கி கட்டமைப்பு இலங்கைக்கு தேவை இல்லை என்ற கோசத்தை முன்வைத்து போராட்டத்தை தொடங்கி இருக்கும் சந்தர்பத்தில் பொது தேர்தல் அறிவிப்பானது அவ்வமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வழி வகுத்துள்ளதுடன் நாட்டு முழுவதும் போட்டியிட இடம் கொடுத்துள்ளது .

இவர்களின் பொது தேர்தல் பரப்புரைகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அமைவதுடம் அவர்களின் கடந்த கால செயட்பாடுகளுக்கான அங்கீகார தேடலாக அமையும் என்பதுடன் சிங்கள மக்களின் மனநிலையையும் அறியும் ஒரு சந்தர்ப்பமாக அமையும் எனலாம் .