சென்ற அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்சவுடன் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் அரசில்வாதிகளும் கூடவே இருந்தனர் , கடைசி நிமிடத்திலேதான் அனைவரும் வெளியேறினார்கள் !

image

AHAMED IRSHAD

 

Video
அஹமட் இர்ஸாட்:- மாவட்டத்தில் இருவருடைய அரசியல் சூனியமாக்கப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அன்மையில் ஏறாவூரில் கலந்து கொண்ட கலந்துரையாடலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறைமுகமாக உங்களினதும் அமீர் அலியினதும் அரசியல் எதிர்காலத்தினை சுட்டிக்காட்டியமையினை நீங்கள் எவ்வாறு கருதுகின்றிர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- என்னை பொறுத்தமட்டில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைமையானது பிரரை தோற்கடிக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். முஸ்லிம்கள் தரப்பில் அதிகமானவர்கள், அனுபவமிக்கவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காககத்தான் 20வது சரத்தினை சமர்பித்த வேலையில் அதற்கு பாரிய எதிர்ப்பினை வெளிக்காட்டினோம். ஆனால் ரவூப் ஹக்கீம் மட்டக்களப்புக்கு வந்து என்னையும் அமைச்சர் அமீர் அலியையும் தோற்கடிப்பதற்காக அரசியல் செய்கின்றமையினை நினைக்கின்ற பொழுது அவர் முஸ்லிம் சமூகத்திற்காக உறுவாக்கப்பட்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்க எந்த அருகதையும் அற்றவர் என்பதனை நிரூபிக்கின்றது. அத்தோடு இம்முறை கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீம் என்றும் இல்லாதவாறு தோற்கடிக்கப்படுவார் என்பது உறுதியாக கூறும் விடயமாக உள்ளது. அது அவருக்கு அல்லாஹ்வினால் கொடுக்காப்படும் தண்டனையாகவும் இருக்காலாம்.
அஹமட் இர்ஸாட்:- பிரரை தோற்கடிப்பதை கைவிட்டு முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் இறக்கியுள்ள வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்கு முயற்சிக்குமாறு முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ரவூப் ஹக்கீமுடனான கலந்துரையடலில் ஹக்கீமிடம் வேண்டிக்கொண்டமையினை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- பசீர் சேகுதாவூத்தின் அக்கருத்தினை வரவேற்க்கின்ற அதே சமயத்தில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மாவட்டத்தில் அரசியல் செய்யும் எங்களுக்கிடையில் இதுவரைக்கும் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டது கிடையாது. அந்த வகையில் கட்சியின் தவிசாளரே தலைவரின் கூற்று பிழையானது என பகிரங்கமாக போராளிகள் முன்னிலையில் கூறுகின்றார் என்றால் முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் போக்கு எவ்வாறு காணப்படுக்கின்றது என்பதை அறிந்து கொள்வதில் தடைகள் இருக்காது என்பதே எனது கருத்தாகும்.
அஹமட் இர்ஸாட்:- உங்கள் பிரதேசத்தில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து உங்களுக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதினால் உங்களின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட வாய்பில்லையா?
ஹிஸ்புல்லாஹ்:- அல்ஹம்துல்லில்லாஹ் எனது வாக்கு வங்கியில் எவ்விதமான சரிவும் ஏற்படப்போவதில்லை. 25 வருடங்களாக என்னை தோற்கடிக்க வேண்டும் என பலரை களத்திலே இறக்கி தோவியைக்கண்ட அப்துர் ரஹ்மான் இம்முறை நேரடியாக களத்தில் குதித்துள்ளார். காத்தான்குடி மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள். மிகத்தெளிவான பாடத்தினை சகோதரர் சிப்லிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் புக்குட்டுவார்கள் என்பது வருக்கினற 18ம் திகதி நாடறிந்த நிதர்சனமாக இருக்கும்.
அஹமட் இர்ஸாட்:- அரசியல் வாதிக்கு ஒரு அரசியல் கோட்டைதான் இருக்கும் ஆனால் உங்களுக்கு காத்தான்குடியுடன் சேர்த்து ரிதிதென்ன ஜெயந்தியாவ என்னும் இரண்டு கோட்டைகள் இருக்கின்றன. அந்த வகையில் இம்முறையும் உங்களுடைய கோட்டையாக ரிதிதென்ன ஜெயந்தியாவ பிரதேசங்களை தக்கவைத்துக் கொள்ள முடியுமா?
ஹிஸ்புல்லாஹ்:- அல்ஹம்துலில்லாஹ் காத்தன்குடியினை பொறுத்தவரையில் மீண்டும் ஹிஸ்புல்லாவின் கோட்டை என மக்கள் நிரூபிப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் ரிதிதென்ன ஜெயந்தியாவ மாத்திரமல்ல ஏறாவூரும் எனது அரசியல் கோட்டையாக மாற்றப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய பூர்வீக நூதனசாலை காலவரையறையின்றி அடைக்கபட்டுள்ளமைக்கான காரணம் என்ன?
ஹிஸ்புல்லாஹ்:- அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா சபையினர் அதில் இருக்கின்ற உறுவச் சிலைகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக டிஜிட்டல் முறையிலாலான பிரதிபளிப்புக்களை காட்சிப்படுத்துமாறு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக ஜம்மியத்துல் உலமாவின் கட்டளைக்கு தலைசாய்க்கும் கடமையானது எமக்கு இருக்கின்றது என்பதனை கருத்தில் கொண்டு டிஜிட்டல் முறைமையானது வரும் வரைக்கும் காலவரையறையின்றி நூதன சலையானது மூடப்பட்டுள்ளது.
அஹமட் இர்ஸாட்:- காத்தான்குடியின் தின்மக் கழிவினை அகற்றும் உங்களுடைய முக்கிய திட்டமானது தற்பொழுது எந்த நிலையில் இருக்கின்றது?
ஹிஸ்புல்லாஹ்:- அல்ஹம்துலில்லாஹ் கடந்த ஆட்சியிலே அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு கொந்துராத்தும் கொடுக்கப்[பட்டுள்ளது. இலங்கையில் இருக்கின்ற முக்கியமான பத்து திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அத்தோடு பதினையாயிரம் மில்லியன் ரூபாய்களை கொண்டு ஆரம்பிக்க்பட்டுள்ள திட்டமாக இருப்பதன் காரணமாக கடந்த அட்சியிலே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு தற்பொழுது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இத்திட்டமானது பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- இம்முறை மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் அணியியுடன் சேர்ந்து நீங்கள் போட்டியிடுவதினால் உங்களை சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?
ஹிஸ்புல்லாஹ்:- சென்ற அரசாங்கத்தில் மஹிந்த் ராஜபக்ஸ்ஸவுடன் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் அரசில்வாதிகளும் கூடவே இருந்தனர். கடைசி நிமிடத்திலேதான் அனைவரும் வெளியேறினார்கள்:. அது அவர்களுடைய சுயநலத்திற்காகவும், சொந்தக் காரணங்களுக்குமாகவே இருந்தன. ஆனால் நான் ஒரு நன்றி கெட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதியாக என்னைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் வந்தது அதில் மைத்திரிபால சிறீசேன வெற்றிபெற்றார் அத்தோடு அக்கதை முடிந்து விட்டது. ஆனால் தற்பொழுது மைத்திரிபால சிரீசேனவை மதிக்கின்றோம். அந்தவகையிலே மைத்திரியை எமது தலைவராக ஏற்றுக்கொண்டு நாங்கள் இத்தேர்தலுக்கு முகம்கொடுக்கின்றோம். ஆனால் நாங்கள் மஹிந்த அணியல்ல மைத்திரியின் தலைமையின் கீழ் செயற்படும் அரசியல்வாதிகள்.
அஹமட் இர்ஸாட்:-கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகப்படியான தமிழ் மக்கள் வாக்களிதிருந்தார்கள். அந்த வகையிலே இம்முறை இரண்டு உறுப்பினர்களை முஸ்லிம்கள் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?
ஹிஸ்புல்லாஹ்:- உண்மையில் அரசியல் அனுபவத்தினூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மூன்று ஆசனங்களையே பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பு மாவட்டத்தில் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் என்பது முற்றிலும் வித்தியாசமான தேர்தலாகும். இங்கு பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையிலே மிகுதியாக இருக்கின்ற இரண்டு ஆசனங்களும் முஸ்லிம்களுக்கே சொந்தமானது. ஆகவே நிச்சயமாக மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை முஸ்லிம்கள் வெண்றெடுப்பார்கள்.
அஹமட் இர்ஸாட்:- கடந்த பொதுத்தேர்தலை விடவும் இம்முறை உங்களால் அதிகளவான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என நினைகின்றீர்களா?
ஹிஸ்புல்லாஹ்:- கடந்த ஜனாதிபதி தேர்தல் பொதுஜன ஐக்கிய முன்னணி 43000 வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் இதேர்தலிலே நாங்கள் 50000 வாக்குகளை எதிர்பார்கின்றோம். அத்தோடு 30000 விருப்பு வாக்குகளை நான் பெற வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு எனது வியூகங்களை அமைத்து வருக்கின்றேன். ஒவ்வொரு ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக 30நபர்களை நியமித்துள்ளோம். ஆகவே சென்ற பொதுத்தேர்தலை விடவும் இம்முறை அதிகப்படியான விருப்புவாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடன் சேர்ந்து போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பிள்ளையானின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது உங்களுக்கும் அவருக்கும் அரசியல் போட்டி நிலவுக்கின்றதா?
ஹிஸ்புல்லாஹ்:- எனக்கு பிள்ளையானுக்கும் இடையில் எவ்விதமான அரசியல் போட்டிகளும் இல்லை. நாங்கள் ஒற்றுமையுடன் எமது பிரச்சார நடவடிக்க்கைகளை மேற்கொண்டு வருக்கின்றோம். யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கிடையைல் எவ்வித பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. ஏன் என்றால் நாங்கள் மிகத்தெளிவான உடன்படிக்கையினை செய்துள்ளோம் அதாவது 18ம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படுக்கின்ற சமயத்தில் எங்களுடைய கட்சியின் சார்பாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் மாவட்டத்திற்கு ஒரு தேசியப்பட்டியல் வழங்கபடும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே யார் வெற்றிபெறப் போகின்றார்கள் என்பதைப் பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
அஹமட் இர்ஸாட்:-மாவட்டத்தில் முஸ்லிம்கள் இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் வாய்புள்ளதாக கூறினீர்கள். அந்த இரண்டு ஆசனங்களையும் வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பு எந்தக் கட்சிக்கு இருகின்றது.?
ஹிஸ்புல்லாஹ்:- எனது 25 வருட அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக அதிகளவான வாக்குகளை நாங்கள் பெறும் அதே சமயத்தில் ஐக்கியதேசியக் கட்சியானது அடுத்த நிலைக்கு வரும் என்பதே எனது கருத்தாகும்.
அஹமட் இர்ஸாட்:- காத்தான்குடி மக்கள் கடந்தகாலங்களைப் போன்று இம்முறையும் தேர்தலுக்கு முதல் இரவு ஹிஸ்புல்லாதான் எமக்கு எம்பி என்ற முடிவினை எடுத்து உங்களுக்கு மட்டும் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?
ஹிஸ்புல்லாஹ்:- காத்தான்குடி மக்கள் இறுதி நேரத்தில் எனக்காக அந்த முடினை ஒவ்வொரு தேர்தல்களிலும் எடுத்திருக்கின்றார்கள். ஆனால் இம்முறை காத்தான்குடி மக்கள் ஏற்கனவே அவ்வாறான முடிவினை எடுத்துவிட்டார்கள். ஆகவே தேர்தல் நெருங்கின்ற நேரத்தில் இம்மண்ணிலே எவரும் எனக்கெதிரான கருத்தினை தெரிவிக்கும் மக்களாக இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கிக்கை எனக்கிருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- இம்முறை தேர்தலில் காத்தான்குடி மக்களுக்கு எதனை முன்வைத்து உங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- குறிப்பாக காத்தான்குடியை மையமாக வைத்தல்ல மாவட்டத்தினை பிரதானமாக கருத்தில் கொண்டே எனது தேர்தல் பிரச்சாரம் அமைந்துள்ளது. பிரதேச, இன, மத , மொழி, வேறுபாடுகளுக்கு அப்பால் எனது அரசியல் அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வேன் என்பதனை தெரிவிக்கும் அதே சமயத்தில் வெளிநாடுகளின் உதவிகளை கொண்டு இந்த மாவட்டத்தினை கட்டியெழுப திட்டமிட்டுள்ளதனை இம்மக்களுக்கு தெரிவித்து வருக்கின்றேன். அத்தோடு சகல வசதிகளையு உள்ளடக்கியதான ஹிஸ்புல்லா ஸ்போட்ஸ் சிட்டியினை நிறுவி எமது மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களினதும் விளையாட்டுத்துறையினை முன்னெடுபதே எனது பிரதான நோக்கமாகும்.
அஹமட் இர்ஸாட்:- மாகாண சபை உறுப்பினர் சுபைர் உங்களுடன் இணைந்துள்ளமையினால் அது உங்களுடைய வெற்றியில் எவ்வாறன தாக்கத்தினை ஏற்படுத்தும்?
ஹிஸ்புல்லாஹ்:- அவரும் எங்களுடைய ஒரு வேட்பாளராகும்.அந்த வகையிலே ஏற்கனவே நான் கூறியதைப் போன்று ஏறாவூரும் இம்முறை எனது கோட்டையாக மாற்றப்படும் என்பதில் சுபைரின் வருகையானது பாரிய தாக்கத்தினை செலுத்தும் என்பது புலப்படும் விடயமாக இருக்கின்ற அதே நேரத்தில் ஏறாவூரில் அவரினால் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- நீங்கள் பிரதி நிதித்துவப்படுத்திய அகில இலங்கை மக்கள காங்கிரசின் தலைவர் றிசாட் பதுர்தீனுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவு எந்த நிலையில் இருக்கின்றது?
ஹிஸ்புல்லாஹ்:- துரதிஸ்டவசமாக நான் அக்கட்சியில் இருந்து வெளியேறி அரசியல் செய்கின்ற நிலை ஏற்பட்டாலும் எனக்கும் றிசாட்டுக்கும் இருக்கின்ற உறவானது நல்ல நிலையிலேயே இருந்து வருக்கின்றது.. அவருடைய வெற்றிக்காகவும், அவருடைய கட்சியானது இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் பலமிக்கதொரு கட்சியாக வரவேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- கடைசியாக காத்தான்குடி மக்களுக்கும் மாவட்டத்தில் இருக்கின்ற வாக்காளர்களுக்கும் எதனை கூற விரும்புக்கின்றீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- கடந்த நேர்காணலின் பொழுது செலின்கோ புறோபிட்செயார் பற்றி கேட்டிருந்தீர்கள். அப்பிரச்சனை தற்பொழுது முற்றாக முடிவடைந்து விட்டது. முஸ்லிம்கள் சார்பாக எவருடைய வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுக்கின்றதோ அதனை உணர்ந்தவர்களாஅகவும் சமூகத்தின் நன்மைகருதியும், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட நபர்களுக்கு வாக்களித்து அவர்களை சமூகத்தின் சார்பாக பாராளுமன்ற அனுப்பும் நடவடிக்கைகளில் இறங்குமாறு வேண்டிக்கொள்வதோடு, கடந்த கால எனது சேவைகளை கருத்தில் கொண்டு இம்முறையும் நான் பாராளுமன்றம் செல்வதற்கு உதவுமாறு எனது மாவட்ட மக்களையும் எனது ஆதரவாளர்களையும் வேண்டிக்கொள்கின்றேன்