பொதுத் தேர்தலுக்கு சுமார் 3250 மில்லியன் ரூபா செலவாகும் !

 

image 

 இம்முறை பொதுத் தேர்தலுக்கு சுமார் 3250 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை பொதுத் தேர்தலுக்கு அதிக செலவு ஏற்படும் என தேர்தல்கள் செயலகம்தெரிவித்தது.

மாவட்டத்திற்கு மாவட்டம் வாக்குச்சீட்டுக்கள் மாறுபடுவதால்,செலவு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றுதல் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செலவு ஆகிய விடயங்களுக்காக 475 மில்லியன் ரூபாவை பொலிஸ் திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பதாகைகள் மற்றும் கட்டவுட்கள் அநாவசியமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்குமாயின் அவற்றை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேட்பாளர்களின் அலுவலகங்களில் மாத்திரம் அவற்றை காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும்அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.